கரூர், செப்.7- கரூர் மாவட்டம் குளித் தலையின் மையப் பகுதி யான காவேரி நகரில் 9240 உறுப்பினர்களைக் கொண்டு மிகச்சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிற இரண்டாம் நிலை நூலகம் ஒன்று உள்ளது. நூலக கட்டிடத்தை விரிவுபடுத்தி நவீன வசதி களுடன்கூடிய நூலகமாக இதனை மாற்றுவதற்கு மாநி லங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே.ரங்க ராஜனின், நாடாளுமன்ற தொகுதி பயன்பாடு நிதியிலி ருந்து (2018-19 நிதியாண்டில்) ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நூலகம் கட்டி முடிக்கப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட கூடு தல் நூலகத்தை மாநிலங்க ளவை முன்னாள் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் திறந்து வைத்து சிறப்புரையாற்றி னார். அதில், ‘சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மாகிய தோழர் கருப்பை யாவின் பெயரை நூலகத் திற்கு வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்’ என்றார். குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப் பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.ஜீவானந்தம், பி. ராஜீ, குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச் செல்வன், கரூர் மாநகர் மன்ற உறுப்பினர் எம்.தண்ட பாணி, சிபிஐ முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பெரிய சாமி, குளித்தலை நகராட்சி மன்ற தலைவர் சகுந்தலா, நூலக வாசகர் வட்ட தலை வர் கோபால் தேசிகன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். மறைந்த தோழர் கருப் பையாவின் மனைவி சரஸ்வ திக்கு டி.கே.ரங்கராஜன் சால்வை அணிவித்து கவு ரவித்தார்.