tamilnadu

img

இன்றும் பொருந்தும் ‘பாட்டுக்கோட்டை’ - தா.முருகன்

தமிழ்க் கலை இலக்கிய உலகில் தங்களது தலைசிறந்த படைப்பு களால் தொண்டாற்றியவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் மகாகவி பாரதியார். அவரைப் பின்பற்றி எண்ணற்ற கவிஞர்கள் தோன்றி னர். அதில் தலையாய இடம் பிடித்த பாவேந்தர் பாரதிதாசனின் வழிகாட்டலில் தோன்றிய கவிஞர்களில் முக்கியமானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவரது படைப்புகள் அனைத்துமே ஏழை எளிய மக்களின் வாழ்க்கைப்பாடுகளை பாடியது. அவரது பாடல்கள் பெரும்பாலும் இசைப் பாடல்களாகவும், சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் எளிய வார்த்தைகளையும் கொண்டிருந்தது. சமூகம் எதிர்நோக்கி இருந்த பல்வேறு பிரச்சனைகளை அவரது பாடல்கள் பேசின. அவை, இன்றும் பொருந்துகின்றன. “தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்ட தெல்லாம் சொந்தம்! சட்டப்படி பார்க்கப் போனால் எட்டடி தான் சொந்தம்! உனக்கு எது சொந்தம் எனக்கு எது சொந்தம்! உலகத்துக்கு எது தான் சொந்தமடா!” என்ற வரிகள், இன்றைய ஒன்றிய பாஜக ஆட்சியின் அரசியலை, தேர்தல் பத்திர ஊழலை அம்பலப்படுத்த, அன்றே எழுதியது போல் உள்ளது. “கூட்டிலே குஞ்சு மறக்க நினைத்தால் குருவியின் சொந்தம் தீருமடா! ஆட்டிலே குட்டி ஊட்ட மறந்தால் ஆட்டோட சொந்தம் மாறுமடா! காலை நீட்டியே வைத்து நெருப்பிடும் போது நேசம் பாசம் பொருளா சைக்கெல்லாம் காட்டிய ஒரு பிடி வாய்க் கரிசியிலே கணக்கு தீர்ந்திடும் சொந்தமடா” என்பது எண்ணத்தக்கது. மேலும், “குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது கொள்ளை யடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உல கமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா!” என்று புத்தி சொல்கிறார்.

பொதுப்பணி செய்வதற்கு இளை ஞர்கள் முன் வர வேண்டும் என்ற நோக்கை  “பள்ளி செல்லும் மாணவருக்குப் படிப்பு வந்தால் பணமில்லை; பணமிருந்தால் இளைஞர்களுக்கு படிப்பதிலே மன மில்லை; மனமிருந்து படிப்பு வந்து  பரிட்சையிலும் தேறி விட்டால் பலபடிகள் ஏறி இறங்கிப் பார்த்தாலும் வேலையில்லை; பொதுப்பணியில் செலவழிக்க நினைக்கும் போது பொருளில்லை; பொருளும் புகழும் சேர்ந்த பின்னே பொதுப்பணியில் நினைவில்லை என்ற பாடலில் காணலாம். சமூகச் சூழல் குறித்து கவிஞர் உறங்கையிலே பானைகளை உருட்டு வது பூனைக்குணம் - காண்பதற்கே உருப்ப டியாய் இருப்பதையும் கெடுப்பதுவே குரங்கு குணம்; ஆற்றில் இறங்குவோரைக் கொன்று இரையாக்கல் முதலைக் குணம் - ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா;  பட்டப்பகல் திருடர் களைப் பட்டாடைகள் மறைக்குது; ஒரு பஞ்சையைத்தான் எல்லாஞ் சேர்ந்து திருடனென்றே உதைக்குது என்று நமக்கு நாட்டு நடப்பை உணர்த்துகிறார்.  மேலும், கணக்கு மீறித் தின்றதாலே கனத்த ஆடு சாயுது அதைக் கண்ட பின்னும் மந்தை யெல்லாம் அதுக்கு மேலமேயுது பணக் கிறுக்கு தலையிலேறிப் பகுத்தறிவுந் தேயுது - இந்தப் பாழாய்ப் போற மனிதக் கூட்டம் தானாய் விழுந்து மாயுது” என்று எச்சரிக்கை செய்கிறார். சமூகச் சூழலை இவ்வளவு எளிய வார்த்தைகளில் பட்டுக்கோட்டையை தவிர  எவர் சொல்ல முடியும்? உழைக்கும் மக்க ளின் குரலாக செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமைதான் நமது செல்வம் கையும் காலும் தான் உதவி கொண்ட கடமை தான் நமக்கு பதவி என்ற பாடலில், பள்ளம் மேடுள்ள பாதையிலே பார்த்து நடக்கணும் காளைகளே பழைய போக்கி லே பயனில்லை. நல்ல விஷயமிருக்கணும் மூளையிலே மேலும் நல்லவர் செய்த செயல்களிலே - பயிர் நடனமாடுது வயல்களிலே - அது நெல் கதிராகி முதிரும் நாளிலே நில முதலாளிகள் கையிலே- போய் நிறைந்திடும் மார்கழி தையிலே” விவசாயத்தின் மேன்மையை, தேவை யை விளக்கிப் பாடிய கவிஞர் உழைப்பாளி களின் குரலாய், “மாடா உழைச்சவன் வீட்டினிலே - பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்? அவன் தேடிய செல்வங்கள் சீமான் வீட்டினிலே சேர்ந்ததினால் வந்த தொல்லையடி...” என்று ஒலித்தார்.