tamilnadu

img

நவ.9 ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை அனுமதிக்கக்கூடாது! சட்டப்பேரவையில் அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

சென்னை, அக்.20- தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் வெறுப்பு அரசியலை பரப்பும் சங்பரி வார் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரக்கூடாது என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.சின்னதுரை வலியுறுத்தினார். சட்டப்பேரவையில் 2022-23 ஆம்  ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடு கள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.சின்னதுரை, “வயிற்றுக்கு சோறிட  வேண்டும், இங்கு வாழும் மனிதருக் கெல்லாம், பயிற்று பல கல்வி தந்து இந்த பாரை உயர்த்திட வேண்டும்’ என்கிற பாரதியின் வரிகளுடன் தனது  உரையை துவக்கினார். தொடர்ந்து பேசிய அவர், “பாரதி யின் வரிகளுக்கேற்ப அரசுப் பள்ளிக ளில்  1 முதல் 5 ஆம் வகுப்பு வரை  கல்வி கற்க வரும் ஏழை, எளிய  குழந்தைகளின் பசிப் பிணியைப் போக்கும் காலை சிற்றுண்டித் திட்டத்தை கொண்டு வந்த முதல மைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டதுடன், ஏழைக் குழந்தை கள் அனைவரும் கல்விப் பயில்வ தற்கு உதவும் இத்திட்டத்தை அனைத் துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்” என்றார். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே  மதம் என்ற ஆர்எஸ்எஸ் கருத்தியலின்  அடிப்படையில், பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை சிதைத்து, ஒற்றைத் தன்மையை நோக்கி நாட்டை நகர்த்திச் செல்கிறது ஒன்றிய பாஜக கூட்டணி அரசு.  இதன் ஒரு பகுதியாகவே இந்தி திணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதை எதிர்த்து சட்டப் பேரவையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க  அரசினர் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்றும் அவர் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை முன்னெடுத்து மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை,  இந்திய இறையாண்மை, அரசியல் சாசனத்தை சீர்குலைத்து வருகிறது. தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து மக்கள் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்க கூடிய வகையி லும் நவம்பர் 6 அன்று நடைபெற விருக்கும் ஆர்.எஸ்.எஸ். பேரணியை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சென்னை அருகே திருபெரும் புதூரில் உள்ள யமஹா மோட்டார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கடந்த ஒருவாரமாக போராடி வரு கின்றனர். யமஹா நிர்வாகம் ஜன நாயக விரோத நடவடிக்கையில் ஈடு படுகிறது. எனவே, தொழிலாளர் நலத் துறை ஆணையம் தலையிட்டு தொழி லாளர்களின் பிரச்சனைகளுக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மகளை இழந்து நிர்க்கதி யாக உள்ள ஸ்ரீமதியின் பெற்றோர் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆகவே, சிபிசிஐடி விசாரணையை நேர்மையாக நடத்தி, குற்றப்பத்திரி கையை விரைவாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குற்றவாளிகள் யாரும் தப்பித்துவிடக்கூடாது. ஸ்ரீமதி யின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். மதிப்பூதியம், தொகுப்பூதியம், கேசூவல், காண்ட்ராக்ட் போன்ற முறைகளில் பணிபுரியும் தொழி லாளர்களான போக்குவரத்து, மின்சாரம், அங்கன்வாடி, ஆஷா, மக்களைத் தேடி மருத்துவம், தூய்மைக் காவலர்கள் உள்ளிட்ட வர்களை பணி நிரந்தரம் செய்து கவுரவமான முறையில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்க ளுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள டி.ஏ. வழங்க வேண்டும். வெளி நாடுகளில் மருத்துவம் பயின்ற மாண வர்கள் தமிழகத்தில் உள்ள அரசு  மருத்துவக் கல்லூரிகளில் உள்ளிருப்பு பயிற்சி மருத்துவர்களாக சேருவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் சின்னதுரை அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.