tamilnadu

img

மதுரையில் கொரோனா பரவல் அச்சம் கொள்ள வேண்டாம்...

மதுரை:
மதுரை வேளாண்மைக் கல்லூரியில்உள்ள கொரோனா மையத்தை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறைஅரசு முதன்மை செயலர் ஜெ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் திங்களன்று ஆய்வு செய்தனர்.

பின்னர் சுகாதாரத்துறை செயலர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 12.8 லட்சம் பேருக்கு பரிசோதனைசெய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, புதுதில்லி போன்ற வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு பரிசோதனைகள் இல்லை.மதுரையைப் பொறுத்தவரை 300க்குமேல் நோய்த்தொற்று வந்தால் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை. அவர்களை தனிமைப்படுத்துவது உபயோகமாக உள்ளது. எந்த ஒரு அறிகுறிஇருந்தாலும் ஒருவருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. நகர்புறத்தை பொறுத்த அளவில் 95 இடங்கள் மற்றும்31 நடமாடும் மையங்கள் மூலமாகவும்காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. முகக்கவசம் சிலர் காதில் மாட்டிக்கொண்டும், சிலர் வாய்க்கு கீழே இழுத்துவிட்டு கொண்டும், சிலர் போடாமலும் உள்ளனர். நோயைக் கட்டுப்படுத்த நிரந்தர வழி ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வராமல் தடுப்பதற்கு கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்.  திருமணம், இறப்பு, மார்க்கெட், இறைச்சிகடைகள், நிறுவனங்கள், வங்கிகள்ஆகிய இடங்களில் சமூக இடைவெளிவிட்டு தள்ளி நிற்கவேண்டும், ஒவ்வொருஇடத்திற்கும் சென்று வந்த பிறகு சோப்பு போட்டு கைகளை கழுவவேண்டும். முகக் கவசத்தை கழற்றும்போது மூக்கைதொடக்கூடாது. கழற்றிய பிறகு சோப்பு போட்டு கைகளை கழுவவேண்டும். 

வேளாண் கல்லூரி மையத்தில் 24 பேருக்கு பாசிட்டிவ் என உள்ளது. அவர்கள் போதிய இடைவெளியில் உள்ளனர்.அரசு மருத்துவமனைகளில் 3139 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 1894 படுக்கைகளும் என மொத்தம்5033 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. கவலைக்கிடமாக இருப்பவர் கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மிதமான பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா ஹெல்த் சென்டர்களிலும், அறிகுறி இல்லாமல் நோய்த் தொற்றுஉள்ளவர்கள் கொரோனா கேர் சென்டர்களிலும் உள்ளனர்.  கொரோனா பாதிக் கப்பட்டவர்களை சமூகத்திலிருந்து விலக்கிபார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

எய்ம்ஸ்
சுகாதாரத்துறை அரசு முதன்மைசெயலர்தொடர்ந்து ஆஸ்டின்பட்டிகாசநோய் மருத்துவமனையில் உள்ளகொரோனா மையத்தையும் ஆய்வு செய்தார். பின் னர் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் பற்றி அவர் கூறுகையில், “எய்ம்ஸ் அமைவது குறித்த சட்டப்பூர்வ அறிவிப்பை ஜூலை 3-ஆம் தேதிமத்திய அரசுகெஜட்டில் வெளியிட்டுள் ளது. மாநில அரசின் சார்பாக 246 ஏக்கர்நிலம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூலம் சுற்றுசுவர் கட்டும்பணி  நடைபெற்று வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய அரசால் ரூ.1246 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் கூட்டுறவு முகமை ஜிக்கார் நிதி உதவியோடு புரிந்துணர்வு ஒப் பந்தம் போடப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூலம் இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இயக்குநர் நியமனம் செய்யும்பணியும் விரைவில் நடைபெறும். கோவிட்-19 காரணமாக சிறிதுகாலம் பணி தாமதமானது. மீண்டும் பணிகள்துரிதப்படுத்தப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் அமைவதன் மூலம்அனைத்து வகையான மருத்துவ வசதிகளுக்கும், உயர்தர ஆராய்ச்சிக்கும் உபயோகமாக இருக்கும். தென் மாநிலங் களை சேர்ந்த மக்கள் மருத்துவம் பார்க்கமிகுந்த வசதியாக இருக்கும். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன், துணைஇயக்குநர்(சுகாதாரம்) மரு.பிரியா ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;