பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல், குடும்ப வன்முறையைக்கு எதிராக செவ்வாயன்று (ஜூலை 19) சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநாடு நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.கே.ஷலைஜா, பி.சம்பத், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், என்.குணசேகரன், கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எம்.ராமகிருஷ்ணன், திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அருள்மொழி, திரைக்கலைஞர் ரோகிணி,சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா ( மத்திய சென்னை), எல்.சுந்தர்ராஜன்(வடசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.