tamilnadu

img

ஒன்றிய அரசுக்கு கண்டனம்...

தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வீடு மற்றும் பத்திரிகை அலுவலகங்களில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தும் வேலையை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கொளஞ்சியப்பன், தமிழ்ச்செல்வன், பெருமாள், நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், இடைக்கமிட்டி செயலாளர்கள் ராம்ஜி, ராமமூர்த்தி, அன்புமணி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.