திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதுதான் ஒன்று பட்ட திருச்சி மாவட்டம். சுதந்திர போராட்ட காலத்தில் திருச்சியில் ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய மகத்தான போராட்டத்தின் பின்னணியில் அவர்கள் மத்தியில் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைகள் உருவாயின. தோழர் கே. அனந்தநம்பியார், என்.கல்யாணசுந்தரம் போன்ற தோழர் கள் ரயில்வே தொழிலாளர்களாக இருந்து கட்சி தலை வர்களாக உருவானவர்கள்தான். 1977 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் உருவானது. அடுத்தடுத்து இதர மாவட்டங்களும் அமைக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியாக அறந் தாங்கி, காவேரி டெல்டா பகுதிக்குள் உள்ளது. ஒன்று பட்ட தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் இயக்கமும், கம்யூ னிஸ்ட் இயக்கமும் உருவானபோது அறந்தாங்கி பகுதியி லும் விவசாய சங்கமும், கட்சி கிளைகளும் உருவாயின. இம்மாவட்டத்தில் பஞ்சாலை தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்க இயக்கம் உருவாகி கட்சி கிளைகளும் உருவாயின. சுதந்திரப் போராட்டத்தின் வீச்சும், கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய இயக்கமும் மாணவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்பின்னணியில் மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து இப்போதும் இயங்கிவரும் தோழ பெரி. குமாரவேல் பற்றியது இக்கட்டுரை... தோழர் பி.கே. என்று கட்சித் தோழர்களால் அன்போடு அழைக்கப்படும் பெரி. குமாரவேல் புதுக்கோட்டை மாவட்டம் மேலக்கோட்டை கிராமத்தில் ஒரு பெரிய விவசாய குடும்பத்தில் 1931 ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இண்டர்மீடியட் சேர்ந்தார்.
பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும்போதே அவர் பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கருஞ்சட்டை அணிந்து மாணவர்கள் மத்தியில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்திருக்கிறார். அந்நியர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டம் வீறுகொண்டு எழுந்தபோது மாணவர்களை திரட்டி மூவர்ணக் கொடியேற்றி இருக்கிறார். இப்பின்ன ணியில் பள்ளியில் மாணவர் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சோவியத் யூனியனுக்கு சென்று வந்த தந்தை பெரியார் எழுதிய கட்டுரைகளையும், கீழத்தஞ்சையில் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களையும் விடுதலை இதழில் படித்த தோழர் குமாரவேலுக்கு கம்யூனிச தத்துவத்தின் மீது பற்று ஏற்பட்டது. “தத்துவம், மக்களின் சிந்தனையை கவ்விப்பிடித்துவிட்டால் அதுவே அவர்க ளை இயக்கும் ஒரு சக்தியாக மாறிவிடும்” என காரல் மார்க்ஸ் கூறிய அடிப்படையில் மார்க்சிய தத்துவத்தை ஏற்றுக் கொண்ட தோழர் பி.கே. ஒரு கம்யூனிஸ்ட்டாக செயல்படத் துவங்கிவிட்டார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் தலைமறைவாக கட்சிப் பணியாற்றி வந்த பி.ஆர்.நாச்சி முத்து மூலமாக 1948இல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பி னரானார். 1948இல் மத்திய அரசு கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்து நாடு முழுவதும் தலைவர்களையும், தொண் டர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இத்த கைய அடக்குமுறை காலத்தில் தோழர் பி.கே. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானது அவருடை போர்க்குணத்தைக் காட்டுகிறது.
கல்லூரியில் படித்த காலத்தில் தோழர் பி.கே. அனைத் திந்திய மாணவர் பெருமன்ற கிளை அமைத்ததோடு அகில இந்திய தலைவர்களை புதுக்கோட்டை நகரத்திற்கு அழைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றச் செய்தி ருக்கிறார். தமிழ் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட இவர் கி.ஆ.பெ.விஸ்வநாதம், ஒளவை துரைசாமி, இரா.நெடுஞ்செழியன் உள்ளிட்டவர்களை அழைத்து கல்லூரியில் கூட்டம் நடத்தியிருக்கிறார். அன்றைய மாநில அரசு கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக டி.கே.சீனிவாசன் உள்ளிட்ட தலை வர்களை அழைத்து வந்து புதுக்கோட்டை நகரத்தில் பி.கே.பொதுக்கூட்டம் நடத்தி இருக்கிறார். கட்சியில் சேர்ந்த பி.கே. கட்சி தலைவர்களை சந்திப்பது, அவர்களோடு அரசியல் விவாதிப்பதில் ஆர்வமாக இருந்தார். இவ்வாறு அவர் சந்தித்த சேர்ந்திசைக்குழு தலைவர் எம்.பி.சீனிவாசன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இவரது அறைக்கு வந்து தங்குவதை மோப்பம் பிடித்த காவல்துறையினர் தோழர் பி.கே.வை அவரது அறையிலேயே சில மணி நேரம் பூட்டி அடைத்து வைத்திருக்கிறார்கள்.
பரபரப்பாக செயல்பட்ட பி.கே., கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்ட பிறகு சீர்காழியில் நடந்த விவசாயி கள் சங்க மாநாட்டில் மாணவர் சங்க தலைவராக கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார். இண்டர் மீடியட் முடித்த பிறகு சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி தேர்வாகி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் 1956இல் அரசு ஊழியராக வேலையில் சேர்ந்தார். அங்கும் நீதிமன்ற ஊழியர்களை அரசு ஊழியர் களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அக்காலத்தில் திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் தோழர் ஆர்.உமா நாத் பஞ்சாலை தொழிலாளர்களை திரட்டி சங்கம் அமைத்து அவர்கள் கோரிக்கைகளுக்காக பல போராட்டங்களை நடத்தினார். 1960இல் புதுக்கோட்டையில் காவேரிமில் தொழிற் சங்கத்தின் நிர்வாகியாக தோழர் பி.கே.வை கட்சி அறிவித்தது. கட்சியின் முடிவை ஏற்று அரசு ஊழியர் பதவியை ராஜினாமா செய்தார். அரசுப் பணியை துறந்து கட்சியின் முழுநேர ஊழியராக பொறுப்பேற்றது அவருடைய அர்ப்பணிப்பை காட்டுகிறது. தோழர் உமாநாத்துடன் இணைந்து காவேரிமில் மற்றும் நமனசமுத்திரம் பகுதிகளில் தொழிலாளர்களுக்கான போராட்டங்களில் தோழர் உமாத்துடன் இணைந்து முன்னணி பாத்திரம் வகித்தார். தோழர் பி.கே.யின் இயக்கப் பணியை அங்கீரிக்கும் வகையில் கட்சியின் ஒன்றுபட்ட திருச்சி மாவட்டக்குழுவிற்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.
1964இல் கல்கத்தாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் 7ஆவது மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. அதில் தோழர் பி.கே. தன்னை இணைத்துக் கொண்டார். மார்க்சிஸ்ட் கட்சி துவக்கப்பட்ட போது அன்றைய மத்திய அரசு கட்சி தவைர்களை கைது செய்தது. தமிழகத்தில் கட்சி தலைவர்க ளோடு தோழர் பி.கே.வும் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகாலம் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தோழர் ஆர்.உமாநாத் அவர்கள் 1962 ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டார். அவருடைய முயற்சியில் புதுக் கோட்டை தனி மாவட்டமாக உருவானது. ஒன்று பட்ட திருச்சி மாவட்டக்குழுவில் உறுப்பினராக இருந்த தோழர் பி.கே. புதிதாக உருவாக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டக்குழுவின் முதல் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு அன்னவாசல், குன்றாண்டார் கோவில், திருமயம் ஆகிய மூன்று ஒன்றியங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இனாம்தார் விவசாயி களுக்காக அவர்கள் சாகுபடி செய்யும் பல்லாயி ரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அவர்களுக்கே பட்டா வழங்க வேண்டுமென்று மகத்தான இயக்கம் நடத்தியது, பட்டாவும் கிடைத்தது. இந்த இயக்கத்தில் தோழர் உமாநாத்துடன் இணைந்து தோழர் பி.கே.வும் முக்கிய பங்காற்றியிருக்கிறார். இப்பகுதிகளில் பல கிராமங்களில் இப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகள் இயங்கி வருகின்றன. மாநிலத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் உருவான போது அச்சங்கத்தின் முதல் மாநில பொதுச் செயலாளராக தோழர் பி.கே.தேர்வு செய்யப்பட்டு மாநில மையத்திலி ருந்து பல ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார். இதை தொடர்ந்து விவசாய தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய நிர்வாகியாகவும் சில ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார்.
1975 ஆம் ஆண்டு அன்றைய மத்திய அரசு அவசர கால சட்டங்களை பிரகடனப்படுத்தி நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 1976 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட கட்சித் தலைவர்களில் தோழர் பி.கே.வும் ஒருவர். மற்ற தலைவர்களோடு சேர்ந்து பல மாதங்கள் தோழர் பி.கே. திருச்சி சிறையில் இருந்தார். 1952 ஆம் ஆண்டு அவருக்கும் ஏஞ்சல்மேரிக்கும் திருமணம் நடைபெற்றது. இது சாதி மறுப்பு, மத மறுப்பு காதல் திருமணம். இத்திருமணத்திற்கு தோழர் பி.கே.குடும்பத்தில் சிலர் எதிர்த்த போதிலும் அவர் உறுதியாக சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டார். தோழர் பி.கே. விவசாய சங்கத்தினுடைய மாவட்ட செயலாளராக பல ஆண்டுகள் பணி யாற்றி இருக்கிறார். தொழிற்சங்க இயக்கத்திலும் அவர் முக்கிய பங்காற்றியிருக்கிறார். கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக தேர்வான பிறகு அவர் கட்சியின் மாநிலக்குழுவிற்கு தேர்வாகி பல ஆண்டுகள் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டு இருக்கிறார். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்டக்குழுவும், ஒன்றியக்குழுக் களும் கட்சிக் கிளைகளும் துடிப்போடு செயல்படு வதற்கு அடித்தளமிட்டவர்களில் முக்கியமானவர் தோழர் பி.கே.என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர் பருவத்திலேயே போலீஸ் அடக்கு முறைக்கு ஆளானார். கைது, சிறை, வழக்கு என பல அடக்குமுறைகளை சந்தித்த தோழர் பி.கே., நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்திருக்கிறார். கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டவர். தற்போது 92 வயதாகும் தோழர் பி.கே. கட்சி உறுப்பினராக இருந்துகொண்டு தன்னால் இயன்ற இயக்கப் பணியை செய்து வரு கின்றார். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தோழர் பி.கே.ஆற்றிவரும் இயக்க பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.