திருநெல்வேலி ஜூலை 15- திருநெல்வேலி மாவட்டம் அம்பா சமுத்திரத்தில் தோழர் ஏ.நல்லசிவன் நூற் றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டம் ஞாயி றன்று நடைபெறுகிறது இந்த கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் தலைமை வகிக்கி றார். அம்பாசமுத்திரம் ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன் வரவேற்றுப் பேசுகிறார். தூத் துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி.ஆறு முகம், தென்காசி மாவட்டச் செயலாளர் உ. முத்து பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி. சம்பத், ஆர்.கருமலை யான், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனக ராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் கே.ஜி. பாஸ்கரன், பி.கற்பகம் ஆகியோர் உரை யாற்ற உள்ளனர். முன்னதாக பிரம்மதேசத்தில் இருந்து தோழர் நல்ல சிவன் நினைவு ஜோதி புறப்படு கிறது. இந்த நிகழ்விற்கு மாவட்டக்குழு உறுப்பி னர் சுரேஷ் தலைமை வகிக்கிறார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மோகன் ஜோதி யை எடுத்துக் கொடுக்க மூத்த தலைவர் வீ. பழனி பெற்றுக்கொள்கிறார்.