tamilnadu

img

“எல்லோரும் நடிக்கின்றோம்! எல்லோரும் பார்க்கின்றோம்!!” - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

Comfort Zone-ஐயே விரும்பும் மனித மனங்களுக்கு இடையூறு ஏற்படும் போது, வருகின்ற ஊச லாட்டம் மற்றும் பாசாங்குத்தனத்தை கதாபாத்தி ரங்களின் வடிவில் காட்சிப்படுத்துகின்ற மலையாளத் திரைப்படமே”ஆட்டம்”. திருமணம் ஆகாத சிவில் இன்ஜினியரான அஞ்சலி,  தலைமை சமையற்காரர் வினய்,சினிமா நடிகர் ஹரி, கோயில் குருக்கள் சனோஷ், ஆங்கிலப் பத்திரிகை எடிட்டராக ஓய்வு பெற்ற மதன் உள்ளிட்ட, வாழ்வின் பல  பகுதிகளில் இருந்து வந்துள்ள பதின்மூன்று உறுப்பி னர்களை கொண்ட அமெச்சூர் நாடகக் குழு”அரங்கு”. வினய் திருமணமானவன். அஞ்சலியோடு ரகசிய காதலில் உள்ளான். விரைவில் விவாகரத்து பெற்று அஞ்சலியை மணமுடிக்கவும் உள்ளான். ஞாயிறன்று புராண நாடகம் வெற்றிகரமாக நடத்திய  கையோடு, நாடகக்குழு உறுப்பினர்கள் மது விருந்தில் கலந்து மகிழ்கிறார்கள். மது மயக்கத்திலேயே அனைவரும் விடுதியில் உறங்குகின்றனர்.நடு இரவில்  குழு உறுப்பினர்களில் ஒருவன், திறந்த ஜன்னல் வழி யாக, உறங்கும் அஞ்சலியின் மார்பை தடவுகிறான். விழித்துக் கொண்ட அஞ்சலி, அவனை அடையாளம் காண்பதற்குள் ஓடி விடுகிறான். ஒரே பெண் உறுப்பினரான அஞ்சலி, பதினாறு வருட மாக, நம்பிக்கையோடு இக்குழுவில் பயணித்துள்ளார். இதுவரை இவ்வாறு நடந்ததில்லை. பாதுகாப்பாக இருக்க வேண்டிய சக உறுப்பினர்களில் யாரோ ஒரு வனே இந்த அத்துமீறலை செய்துள்ளான். யார் அவன்? உலகப் புகழ்பெற்ற “ரோஷோமான்” திரைப்பட பாணியில், கண் முன் நிற்கும் திருடனை கண்டறிய, குழு  உறுப்பினர்கள் நடத்துகின்ற பொய், மெய் கலந்த விவாத மோதல்களே, இப்படக்கதை.  அஞ்சலிக்கு பாதுகாவலனாக தன்னை நினைத்து கொண்டு வினய், குழுவின் ஒருங்கிணைப்பாளர் மதனின்  ஆதரவோடு,குழு உறுப்பினரான ஹரியே குற்ற வாளியென்று குழுவை முதலில் நம்பவைக்கின்றான்.அதற்காக பல பொய் ஜோடனைகளை உருவாக்கு கிறான். பின்னர்,ஹரி மூலம் நல்ல பணச்சலுகைகளுடனான நாடகம் ஐரோப்பாவில் நடத்திட வாய்ப்பு வருகிறது.இப்போது இதே குழு, அஞ்சலிக்கு நடந்த துரோகத்தை  மறந்து, ஹரி தவறு செய்யவில்லை என்பதை நிரூபிக்க முயற்சிப்பது, சந்தர்ப்பவாத ஆணாதிக்கத்தின் உச்சம். அஞ்சலிக்கு நேர்ந்த கொடுமையை அதிர்ச்சியோடு குழு விவாதிக்கும்போது மின்சாரத் தடையால் வீடே வெட்கையாக இருக்கும்.இதனால் வீட்டின் வெளியே வெயிலில் கூடி பேசி,ஹரியை குழுவிலிருந்து நீக்கும் முடிவு வேண்டா வெறுப்பாக எடுக்கப்படும். இதே குழு ஹரிக்கு ஆதரவாக பேசும் சமயத்தில், ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட பொய்கள் கரையும். அப்போது,காற்றோடு மழை பெய்யும். அஞ்சலி குழுவிலிருந்து விலக முடிவெடுக்கும் போது மழை நின்று ஊரே குளிர்ந்திருக்கும். கதையோட்டத்தோடு பின்னிபிணைந்து வரும்  சீதோஷ்ண நிலைகளை,பாத்திரங்களின் மனநிலை களை பிரதிபலிக்கும் வகையில் இணைத்து,காட்சி மொழியை இயக்குநர் கையாண்டிருப்பது அழகு. பொய் முடிச்சுகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்வது ரசிக்கும்படி இருக்கும். படத்தில் ஆண்களின் பாசாங்குத்தனம்,ஊசலாட்ட மனம் ஆகியவைகள் மிக நுட்பமாக விவரிக்கப் பட்டுள்ளது.  இயக்குநர் ஆனந்த ஏகர்ஷியே திரைக்கதையும் அமைத்துள்ளார். பதிமூன்று பாத்திரங்களின் சந்தர்ப்ப வாத மனப்போக்கை தெளிவாக உணரும் வகையில் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இதற்கு பக்க பல மாக மகேஷ் பூவானந்தின் படத்தொகுப்பும் உதவி யுள்ளது. அனுருத் அனீஸ், தூறல், மழைப் பொழிவு, மழை நின்ற குளிர் இரவு ஆகியவற்றை நாமும் உணரும் வகை யில் ஒளிப்பதிவு செய்து அசத்தியுள்ளார். குழு முடிவெடுக்கும் தருணத்தில் ஒலிக்கும் பின்னணி இசை “In the mood for love” என்ற கொரியப்படத்தின் பின்னணி இசையை நினைவூட்டுகிறது. அஞ்சலியாக நடித்துள்ள ஐரின் ஷிகாப்,காதலன் வினய் பொய் சொல்ல வற்புறுத்தும்போது,முக ஜாடை யிலே சங்கடப்படுவதும்;நாடக நடிப்பை வெளி நாட்டி னர் பாராட்டும்போது அதனை ஏற்கின்ற பாவனையும்; ஒப்பனை அறையில் தேநீர் எடுத்து வரும் பையனை  பார்த்தவுடன் மணிபர்ஸை பாதுகாப்பாக மறைத்து வைக்கும் ஹரியை, மௌனமாக கடிந்து கொள்வதும்;  குழுவின் துரோகத்தை சிரித்தப்படி, அழுதுகொண்டே கடப்பதும் போன்ற பல காட்சிகளில் உணர்வுப்பூர்வ மான நடிப்பை தந்துள்ளார். வினய் ஆக நடித்துள்ள வினய் போர்ட்,காதலி அஞ்ச லிக்காக சின்ன சின்ன பொய்களை நம்ப வைக்க இறங்கிப் போய் குழு உறுப்பினர்களிடம் மன்றாடுவது, எதிராக பேசுபவர்களிடம் மோதுவது; வாய்ப்புக்காக இயக்குநரிடம் அழுவது;ஹரி பாராட்டப்படும்போது, அதனை மனவெறுப்போடு பார்ப்பது; அஞ்சலியிடம் சோகமுகத்தை காட்டி,முத்தம் பெறுவது போன்றவை களில் இயல்பாக நடித்து, கவனத்தை ஈர்த்துள்ளார். சினிமா நடிகர் ஹரி என்ற பாத்திரமேற்றுள்ள கலா பவன் ஷாஜோன்,குழுவில் தன்னையே முன்னிலைப் படுத்துவது; சேட்டைகள் மற்றும் பொய் சொல்லி ஏமாற்று வது எனப் பல குறும்புகளை செய்து கதையின் திடீர்  திருப்பங்களுக்கு தூணாக நின்று சிறப்பாக நடித்துள்ளார். பதின்மூன்று பாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு  பெரும் பங்காற்றி, இயல்புத் தன்மை மீறாமல் நடித்துள்ளனர்.  பட ஆரம்பத்தில் வரும் புராண நாடகத்தில்,பிறன் மனைவியான பத்மினியை, கபிலன் என்பவன் அப கரிக்க நினைக்கிறான். பத்மினி இதனை எதிர்க்கிறாள். தனக்கு நேர்ந்த அனுபவத்தையே நாடகக் கருவாக வைத்து,அஞ்சலி நடத்தும் இறுதி நாடகத்தில், தவறி ழைத்தவன் குற்ற உணர்வால்,முகமூடியை கழற்றி தன்னைத் தானே அடையாளம் காட்ட முன்வருவான். அவனை காண விரும்பாமல், முகமூடியோடு தொடரவே  அவனை வலியுறுத்துவாள். மற்ற முகமூடிகளுக்கு நடுவில் இவன் மட்டும் முகத்தோடு இருப்பதை ஏற்க இவள் மனது கூசுகிறது. ஏனென்றால் அனைவருமே முகமூடி தரித்த பொய்யர்கள் என முடிவெடுக்கிறாள்.  ஆனால் படத்தில், ஹரி தவறு செய்யவில்லை என ஊர்ஜிதப்படுத்தும் குழு;வேறு யார் தவறிழைத்தது என்பதை கண்டறிய தவறுகிறது. இதனை உணர்ந்து குழுவிலிருந்து வெளியேறுகிறாள். ஆண்களால், புராண காலம் தொட்டு இன்று வரை  பெண்களின் பாதிப்புகள் தொடர்கிறது என்பதையே இம்மூன்று கதைகளும் பேசுகிறது. திருமணமானவனுடன் கள்ள உறவிலிருக்கும் அஞ்சலி உள்பட, படத்தின் பதிமூன்று பாத்திரங்களும் ஏதோவொரு வகையில் தங்களது சுய நலத்திற்காக பொய் பேசவும் அல்லது அதற்கு சார்பாகவும் நிற்கின்ற னர். இதனால் உண்மை குழப்பமாகவும், சிக்கலாக வுமே உள்ளது. அதிகப்படியான வசனங்கள் இருந்தாலும், அடுத்த டுத்து எதிர்பாரா திருப்பங்களுடன், எவ்வித தளர்ச்சி யும் இன்றி மனித உளவியலை கூர்மையாக அணுகி, நல்ல படம் பார்த்த அனுபவத்தை தந்துள்ளது, ப்ரைம்  அமேசானில் வந்துள்ள இப்படம்.