tamilnadu

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாநிலைப் போராட்டம்

சென்னை, ஜூலை 8- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி பல்கலைக்கழக ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அளவில் சிறப்பாக இருக்கும் தமிழ்நாட்டு உயர் கல்வியை சீரழிக்கும் அபாயம் கொண்ட உயர்கல்விக்கான தமிழ்நாடு மாநில கவுன்சில் பொது பாடத்திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிகை குழு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை  எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாநிலைப் போராட்டம்  சனிக்கிழமை (ஜூலை 8) நடை பெற்றது. பேராசிரியர் ஜே.காந்திராஜ் தலைமை தாங்கினார். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன செயல் தலைவர் எம்.துரைப்பாண்டியன் போராட்டத்தை துவக்கி வைத்தார். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலை வர் இரா.பெருமாள்சாமி, தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏஜாஸ், பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணராஜ், மண்டல பொறுப் பாளர்கள் டி.ஆனந்த், ஜெயசீலன், அன்சர், ராஜாசிம்மன்,

ஜேவியர்  செல்வகுமார் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். முன்னாள் தேசிய செயலாளர் ஜெயகாந்தி போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 1.1.2016க்கு பின் பணியில் சேர்ந்த, பட்டம் பெற்ற  ஆசிரியர்களுக்கு எம்.பில் மற்றும் பி.எச்.டி பட்டத்திற்கான ஊக்க ஊதியம்  வழங்க வேண்டும், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும், கல்லூரி ஆசிரியர் களுக்கு பேராசிரியர் பதவிக்கான கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்  முறை ஆணையை உடனே வழங்க  வேண்டும், புத்தொளி, புத்தாக்க பயிற்சிக்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும். பல்கலைக் கழக தன்னாட்சியை கேள்விக்குள் ளாக்கும் பாடத்திட்டத்தை கருத்துக் கேட்புகளுக்குப் பின் அடுத்த கல்வி ஆண்டிலிருந்து (2024-2025)  அமல்படுத்த வேண்டும், பணியில்  உள்ள ஆசிரியர்களின் இணைப்  பேராசிரியர்  பொது பணி மேம்பாட் டிற்கு பி.எச்.டி கட்டாயம் என்பதை தளர்த்த வேண்டும், தமிழ் கல்வித் தகுதித் தேர்வு பல்கலைக்கழகங்களில் முடித்திருப்பவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் என்.ராமலட்சுமியின் ஊழல் போக்கை தடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.