tamilnadu

img

‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்குக: கூட்டுறவு ஊழியர்கள் வலியுறுத்தல்

சென்னை, டிச. 20 - மாநில, மாவட்ட கூட்டுறவு வங்கி களை இணைத்து ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்க கோரி திங்களன்று  (டிச.20) சென்னையில் கூட்டுறவு ஊழியர்கள் தர்ணா நடத்தினர். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகிய வற்றை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக அரசுக்கும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் கூட்டுறவு வங்கிகளை இணைத்துக் கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கேரளாவில், மாநில, மாவட்ட கூட்டுறவு வங்கிகளை இணைத்து கேரளா வங்கி உருவாக்கப்பட்டு, அபரித மான வளர்ச்சியோடு செயல்படுகிறது. இதுகுறித்து தமிழக நிதியமைச்சரிடம் சம்மேளன நிர்வாகிகள் விவரித்துள்ள னர்.

கார்ப்பரேட்டுகளின் நலன்க ளுக்காக ஒன்றிய அரசால் பேமெண்ட் வங்கியை முறையை உருவக்கியது. அதைப் பின்பற்றி தமிழ்நாடு அரசும் பேமெண்ட் வங்கி உருவாக்க இருப்பதாக தெரிகிறது. எனவே, தமிழகத்தில் 1200 கிளைக ளோடு செயல்பட்டு வரும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி களை ஒருங்கிணைத்து ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்க வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடை பெற்றது. இந்தப் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன்,கூட்டுறவு சங்கங்கள் இருப்பதால்தான் விவசாயி களுக்கு குறைந்த வட்டியில் கடன்  மற்றும் கடன் தள்ளுபடி கிடைக்கிறது.

இதை சீர்குலைக்க கூட்டுறவு அமைப்புகளை தனது கட்டுப்பாட் டின் கீழ் கொண்டு வர ஒன்றிய அரசு  முயற்சிக்கிறது. வர்க்கப் போராட்டத் தின் முன்னால் வகுப்புவாதம் எடுபடாது  என்பதை விவசாயிகள் போராட்டம் வலியுறுத்தி உள்ளது. ஒன்றிய அரசின் முயற்சிகளை முறியடிக்க மக்களை திரட்டுவோம்” என்றார். இந்தப் போராட்டத்திற்கு சம்மே ளனத்தின் தலைவர் தி.தமிழரசு தலைமை தாங்கினார். ஃபெபி பொதுச் செயலாளர் என்.ராஜகோபால், அகில இந்திய செயலாளர்கள் கே.கிருஷ்ணன், சி.பி.கிருஷ்ணன், சம்மேளன பொதுச் செயலாளர் இ.சர்வேசன் உள்ளிட்டோர் பேசினர்.

;