tamilnadu

img

தீப்பெட்டித் தொழிற்சாலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

கோவில்பட்டி, செப்.8- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை யில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழனன்று ஆய்வு மேற்கொண்டார்.  திருநெல்வேலியில் தமிழக அரசு சார்பில் நடை பெற்ற நிகழ்வில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பின்னர் கோவில்பட்டியில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற் சாலையில் ஆய்வு மேற் கொண்டார். இதனைத் தொடர்ந்து, தீப்பெட்டி தொழிற்சாலை யில் பணியாற்றும் தொழி லாளர்களுடன் கலந்துரை யாடினார். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களையும் பெற்றுக் கொண்டார். பின்னர், தீப்பெட்டித் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் நடை பெற்ற ஆலோசனைக் கூட்ட த்தில் கலந்துகொண்டார். பின்னர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தை கள் நலப்பிரிவு கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.