தஞ்சாவூர், டிச.17 - கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி சிஐடியு மணல் மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சையில் நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் தாலுகா கொத்தங்குடி, பூதலூர் தாலுகா திருச்சின்னம்பூண்டி கொள் ளிடம் ஆற்றிலும், பட்டுக் கோட்டை தாலுகா சின்ன ஆவுடை யார்கோவில் அக்னி ஆறு ஆகிய இடங்களில் மாட்டுவண்டி தொழிலா ளர்களுக்கு என தனியாக மணல் குவாரி ஏற்படுத்தப்பட்டு, ஆயிரக்க ணக்கான மாட்டுவண்டித் தொழிலா ளர்கள் மணல் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தனர். கொரோனா ஊரடங்கால் 2021 ஆம் ஆண்டு மே மாதம், தமிழக அரசு தற்காலிகமாக தமிழகம் முழுவ தும் இயங்கி வந்த 23 மாட்டு வண்டி களுக்கான மணல் குவாரியை மூடி யது. இந்நிலையில் மாட்டு வண்டிக் கென இயங்கி வந்த மணல் குவாரியை மீண்டும் திறக்கக் கோரி, மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் பலகட்ட போராட் டங்களை நடத்தியது.
தமிழக அரசின் நீர்வள ஆதாரத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு தாக்க ஆணையத்திற் கும் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென செய்தி ஊடகங்களில் பாபநாசம் தாலுகா கோவிந்தநாட்டுச்சேரி, வீரமாங்குடி, திருவையாறு தாலுகா மருவூர், சாத்தனூர் ஆகிய இடங்களில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கான அறிவிப்பை மாநில மாசு கட்டுப்பாடு சுற்றுச்சூழல் தாக்க ஆணையம் மற்றும் தஞ்சை நீர்வள ஆதார துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பானது லாரி களுக்கான மணல் குவாரி என்பது போல தெரிகிறது. மணல் மாட்டு வண்டிகளுக்கான அறிவிப்பாக தெரியவில்லை. இதனால், கடந்த காலங்களில் மாட்டு வண்டிகளுக் கென மணல் குவாரி திறக்க வலியு றுத்தி போராடி வந்த மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி யும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை மனு
இந்நிலையில், தஞ்சை நீர்வளத் துறை செயற்பொறியாளரை, நூற்று க்கணக்கான மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சந்தித்து, ஏற்கனவே நடைமுறையில் இயங்கி, கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட மாட்டு வண்டிகளுக்கென கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த கும்பகோ ணம் தாலுகா கொத்தங்குடி, பூதலூர் தாலுகா திருச்சென்னம்பூண்டி ஆகிய குவாரிகளையும், பட்டுக்கோட்டை தாலுகா சின்ன ஆவுடையார் கோவில் உள்ளிட்ட மணல் குவாரி, அதேபோல் புதிதாக மாட்டு வண்டி யில் மணல் எடுப்பதற்காக தேர்வு செய்யப்பட்டு, மாநில சுற்றுச்சூழல் தாக்க ஆணைய அனுமதிக்காக காத்திருக்கும், திருவையாறு தாலுகா முள்ளங்குடி, பாபநாசம் தாலுகா நடுப்படுகை, கோவிந்த நாட்டுச்சேரி, வீரமாங்குடி, திருவை யாறு தாலுகா சாத்தனூர், மரூர், பட்டுக்கோட்டை தாலுகா தொக்கா லிக்காடு, பேராவூரணி தாலுகா பெத்த னாட்சி வயல் ஆகிய இடங்களில் உட னடியாக மாட்டு வண்டிக்கு மட்டும் மணல் எடுக்க குவாரியை திறக்க வேண்டும். லாரியில் மணல் எடுக்க குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்த வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.
சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் தலைமையில், முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் கோவிந்த ராசு, தங்கையன், நாகராஜ், இமானு வேல், ரமேஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மனுவின் நகல் தமிழக முதலமைச்சருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.
சிஐடியு சி.ஜெயபால் பேட்டி
இதுகுறித்து சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் கூறுகை யில், “தமிழக அரசு சுற்றுச்சூழல் தாக்க ஆணைய உத்தரவுப்படி, கொரோனா தொற்று ஊரடங்கினால் தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட தமிழ கம் முழுவதும் மூடப்பட்ட, மாட்டு வண்டிகளுக்கான 23 மணல் குவாரி களை உடனடியாக திறக்க வேண்டும். மணல் எடுப்பதற்கான இடங் களை ஆய்வு செய்து தகுதியான இடங்களை தேர்வு செய்து, ஒப்புத லுக்காக காத்திருக்கும் இடங்களில் உடனடியாக மாட்டு வண்டிகளுக்கு மட்டும் மணல் குவாரி அமைத்து தர வேண்டும். லாரியில் மணல் எடுக்க அனுமதி வழங்கக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்துகிறோம். எங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்க்கும் என நம்பு கிறோம். அவ்வாறு இல்லாமல் கால தாமதம் ஏற்பட்டால் இம்மாத இறுதி யில், தலைநகர் சென்னையில், தமிழ கம் முழுவதும் உள்ள பல ஆயிரக் கணக்கான மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஒன்று திரண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்து வோம்” என்றார்.