tamilnadu

121 அரசுப் பள்ளிக் கட்டிடங்கள்

சென்னை, நவ. 3- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதனன்று (நவ. 4) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை கட்டிடங்களை திறந்து வைத்தார். நபார்டு திட்டம், ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி, மாவட்ட கனிமவள நிதி மற்றும் ஆசிரியர் நலத்திட்ட நிதி ஆகியவற்றின் மூலமாக 169 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப் பீட்டில் இக்கட்டிடஙகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 121 அரசு பள்ளிக் கட்டிடங்கள், கிளை நூலகக் கட்டிடம் மற்றும் ஆசிரியர் இல்லத்தை காணொலி காட்சி  வாயிலாக முதல்வர் திறந்து வைத் தார். சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 3 கற்போர் மையங்க ளுக்கு மாநில எழுத்தறிவு விருது களையும் முதல்வர் வழங்கினார். நபார்டு திட்டத்தின் கீழ்  கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகக் கட்டிடங்கள், குடிநீர் வசதிகள், கழி வறைகள் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.