tamilnadu

img

ஆவின் 5 புதிய தயாரிப்புகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகம்

சென்னை,ஜன.19- ஆவின் நிறுவனத்தால் புதியதாக தயாரிக்கப்பட்ட பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம் (மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில்), பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒய்ட்னர் ஆகிய ஐந்து புதிய பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆவின் நிறுவனம், தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு 4.20 லட்சம் பால்  உற்பத்தியாளர்களிடம் நேரடியாக கொள்முதல் செய்து பால் மற்றும் பால்  பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாய மான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டு களுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழ கத்தில் முன்னோடியாக திகழ்ந்து வரு கிறது. முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப் பேற்றவுடன், ஆவின் உற்பத்தி பொருட்கள் லாபம் ஈட்ட வழிவகைகளை ஆராய வலி யுறுத்தியதன் அடிப்படையில், அவின் நிறுவனம் பல்வேறு புதிய உப பொருட்  களை ஆவின் நிறுவனத்தின் மேம்பாட்டுக் காக அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகை யில் ஐந்து புதிய பொருட்களை தற்போது  ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கி றது. பிரீமியம் மில்க் கேக்: இனிப்பு பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரீமியம் மில்க் கேக் தயாரித்துள்ளது.

 250 கிராம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இந்த  இனிப்பு வகை தரம் மிகுந்த பால் பவுடர்  மற்றும் ஆவின் அக்மார்க் நெய் உபயோகித்து  தயாரிக்கப்பட்டுள்ளது. யோகர்ட் பானம் (மாம்பழம் ஸ்ட்ராபெரி சுவை): இளைஞர்களை கவரும் வகையில் யோகர்ட் பானம் மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில் தயாரிக்கப்பட்டு 200 மி.லி. அளவு கொண்ட பாட்டில் ரூ.25 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பானம் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும்  ஜீரண சக்தி மேம்படும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளது. பாயாசம் மிக்ஸ்: ஆவின் நுகர்வோர் தேவையை அறிந்து பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் எளிமையாக பாயாசம் தயாரிக்கும் வகையில் பாயாசம் மிக்ஸ் 100  கிராம் ரூ.50 மற்றும் 200 கிராம் ரூ.100 என்ற  அளவில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப் படுகிறது. இந்த புதிய பாயாசம் மிக்ஸ் குழந்தை களை கவரும் வகையில் மிகுந்த சுவையுடன்  தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பாயசம் மிக்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு தேவை யான பாதம், முந்திரி, திராட்சை மற்றும் பால்பவுடர் ஆகிய பொருட்களை கொண்டு சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பால் புரத நூடுல்ஸ்: நுகர்வோர்களின் குறிப்பாக வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையிலும் குழந்தைகள் விரும்பி சுவைக்கக்கூடிய பால் புரத சத்து  மிகுந்த நூடுல்ஸ் 70 கிராம் ரூ. 10 என்ற விலை யில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. டெய்ரி ஒய்ட்னர்: அவசர பால் தேவைக்கு உடனடியாக தயாரிக்கும் வகையி லும், உணவகங்கள், தேநீர் கடைகள், விடுதிகள் மற்றும் பெரிய நிறுவனங்களின் தேவையினை கருத்தில் கொண்டும் பயணங்களின் போது எளிதாக எடுத்து செல்லக்கூடிய டெய்ரி ஒய்ட்னர் புத்தம் புது  வடிவில், 20 கிராம் ரூ.10 , 200 கிராம் ரூ.80  மற்றும் 500 கிராம் ரூ.200 என்ற விலையில்  ஆவின் டெய்ரி ஒய்ட்னர் அறிமுகப்படுத்தி யுள்ளது. ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத்  தீவன தொழிற்சாலை மற்றும் ஓசூரில்  புதிய தாது உப்புக் கலவை தொழிற்சாலை களையும் காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் துரைமுருகன், நாசர், கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவஹர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.’