tamilnadu

img

“பெரியார் உலகம்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, செப். 17- தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு சனிக் கிழமையன்று (செப்.17) காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, சுப்பிர மணியன், அன்பில் மகேஸ் பொய்யா மொழி மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து திராவிடர் கழகம் சார்பில் திருச்சி யில் அமைக்கப்படவுள்ள “பெரியார் உலகம் - ஆய்வகம் - பெரியாரியல் பயிலகம்”அடிக்கல் நாட்டு விழா பெரியார் திடலில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, பெரியார் பிறந்தநாள் விழா மலரை வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில், “சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு, பெண்ணுரிமையின் தலைமையகமாக மட்டுமல்ல இந்தியாவின் சமூக நீதிக்கான தலைமையகமாகவும் பெரி யார் திடல் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது என்றார். உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் சீர்திருத்த இயக்கங்கள், பகுத்தறிவு இயக்கங்கள், பெண்ணுரி மைச் செயல்பாட்டாளர்கள் என  பலரும் பெரியாருடைய சிந்தனை களைத் தேடித் தேடி படித்துக் கொண்டி ருக்கிறார்கள். தந்தை பெரியாரை உலகத் தலைவராக உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. 

இந்தியாவுக்கு மட்டுமான தலைவராக அல்லாமல் உலகம் முழுமைக்குமான தலைவராக தந்தை பெரியார் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார். அதனால்தான், “பெரியார் உலகம்” என்று பெயர் சூட்டி, அந்தப் பணியை நிறை வேற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் சிந்தனைகளை மொழி பெயர்த்து உலகின் பல்வேறு மொழி களில் வெளியிடவும் இருக்கிறோம் என்றும் அவர் கூறினார். முன்னதாக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்றார். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நன்றி கூறுகிறார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, பி.கே.சேகர்பாபு, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பெரியார் உலக கட்டிடம் ரூ.60 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 6 ஆண்டில் பணி களை முடிக்கவும் முடிவு செய்துள்ள னர்.  மொத்தம் 27 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படுகிறது. அதில் பெரி யாருக்கு 95 அடி உயரத்தில் சிலையும்,  60 அடியில் பீடமும் என 155 அடியில் சிலை நிறுவப்பட உள்ளது.

;