சென்னை, ஜூலை 2- இந்தியாவிலேயே அதிகளவு கல்வெட்டு கள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில் தான் எனவும், தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழ வைக்கும் என்றும் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரி வித்துள்ளார். கலிபோர்னியாவில் வட அமெரிக்கா தமிழ் சங்கப் பேரவையின் 36ஆவது தமிழ் பெருவிழா மாநாடு நடைபெறுகிறது. இதில் காணொலி வாயிலாக முதலமைச்சர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 4 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தையது தமிழ் நாகரிகம். இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து எழுதப்பட வேண்டும். மொழி உணர்வு என்பது தமிழருக்கு குருதி போன்றது. தமிழ் நமக்கு மொழியாக மட்டு மல்லாமல் உயிராக, போராட்டத்தின் போது வாளாக உள்ளது. தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழவைக்கும். மொழியின் பெயரை பெயராக வைப்பதில் தமிழர்கள் முன்னோடியாக உள்ளனர். கணிக்க முடி யாத தொன்மையான வரலாற்றை கொண்ட தாக தமிழும், தமிழ் இனமும் உள்ளது. படிப் பறிவு, எழுத்தறிவு பெற்ற மேம்பட்ட சமூக மாக தமிழ் சமூகம் உள்ளது. இதற்கு சான்றாக கீழடி அகழாய்வு முடிவுகள் உள்ளன. நாட்டிலேயே அதிக கல்வெட்டுகளை கொண்டதாக தமிழகம் திகழ்கிறது. அதிலும் மதுரையை சுற்றியுள்ள வைகை ஆறு, கீழடி பகுதிகளில் அதிக கல்வெட்டுகள் கிடைத்துள் ளன. கரும்பொருநை பகுதியான தாமிர பரணி பகுதிகளில் கிடைத்த ஆய்வுகள் மூலம் 3,100 ஆண்டுகளுக்கு முந்தைய சமூகமாக தமிழ் சமூகம் இருந்துள்ளது. சிவகிரியில் நடந்த ஆய்வுகளின் மூலம் செங்கல் வடிகால் அமைப்பின் மூலம் நல்ல தண்ணீர் எடுத்து சென்றது தெரிய வந்துள் ள்ளது. மயிலாடும்பாறை பகுதியில் கண்ட றிந்த ஆய்வு மூலம் 4 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னமே இரும்பை பயன்படுத் திய சமூகமாக தமிழ் சமூகம் இருந்தது தெரி யவந்துள்ளது. இத்தகைய ஆய்வுகளின் முடி வின் மூலம் தமிழரின் வரலாறு வெளிச்சத் திற்கு வந்திருக்கிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வு களுக்கு ஊக்கமளித்து வருவதால்தான், இந்தியாவிலேயே அதிகளவு கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் கல்வெட்டுகள் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், கீழடியில் ரூ.18 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட் டுள்ளது. இவற்றையெல்லாம் காண்பதற்கு வட அமெரிக்கா தமிழர்கள் அனை வரும் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.