சென்னை, அக்.11- எதிர்க்கட்சி துணைத் தலை வர் இருக்கை விவகாரத்தில் பேரவையில் அமளியில் ஈடு பட்ட அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்ட னர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று (அக்.11) கேள்வி நேரத்திற்கு பிறகு, பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ஓ.பன்னீர்செல்வம் தற்போது அமர்ந்துள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை, ஆர்.பி. உதய குமாருக்கு வழங்கக்கோரி பத்து முறை கடிதம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஓபிஎஸ் உள்ளிட்ட 3 உறுப்பினர்களை நீக்க கோரிய கடிதம் மீதும் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை ஏன்? என்றார். பேரவைத் தலைவர் விளக்கம் எச்சரிக்கை இதற்கு விளக்கம் அளித்த பேரவைத் தலைவர் அப்பாவு, “எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக, சட்டம் விதி என்ன சொல்கிறதோ அதன் படி தான் நடக்கிறேன். இந்த விவகாரத்தில் சட்டப்படியே நடக்கிறேன். வீம்புக்காக எதை யும் செய்யவில்லை. ஒருவர் எந்த சின்னத்தில் வென்று பேரவைக்கு வருகிறாரே? அதே சின்னத்தில் தான் கடைசி வரை பார்ப்பேன். உறுப்பினர்களுக்கு இருக் கையை ஒதுக்கும் பேரவைத் தலைவர் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. ஓ.பன்னீர் செல்லம் முன்னாள் முதல மைச்சர் என்ற முறையில் அவருக்கு உரிய இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது”என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கூச்ச லிட்டனர். அப்போது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பேச முற்பட்ட தால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தர்னாவில் ஈடுபட்டனர். மேலும், அவை நிகழ்ச்சிக்கு குந்தகம் விளைவித்தனர். இதனால் பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அதி முக உறுப்பினர்களை வெளி யேற்ற அவை காவலர்களுக்கு அப்பாவு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, சபைக் காவலர்கள் அதிமுக உறுப் பினர்களை பேரவையில் இருந்து வெளியேற்றினர். அப்போது ஒரு சில உறுப்பினர்கள் வெளியேற மறுப்பு தெரிவித்தனர். அவர் களை அவை காவலர்கள் குண்டு கட்டாக தூக்கிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், “உட்கட்சி பிரச்சனை குறித்து பேச்சு களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். அதிமுக தலைமை தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்காலிக மானதே’’ என்றார். இதன் பின்னர் பேசிய பேரவைத்தலைவர் அப்பாவு, கடந்த ஆட்சியின்போது அதிமுக வினர் இரண்டு குழுக்களாக பிரிந்திருந்தபோது ஆளுநர் ஒன்று சேர்த்து வைத்தைப் போன்று பேரவைத் தலைவர் செய்ய வேண்டும் என்று நினைத் தால் அது முடியாது. இப்போதும் அதிமுக டிடிவி.தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா என்று நான்கு பிரிவுகளாக இருக் கிறார்கள். ஆனால், ஆளும் திமுகவை எதிர்ப்பதில் ஒத்த கருத்துடன் இருக்கிறார்கள். இவர்கள் என்றைக்குமே ஒன்று சேரமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இன்றைக்கு அவையில் அதிமுக வினர் நடந்ததைப்போன்று எதிர் காலத்தில் நடந்து கொண்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.