tamilnadu

img

சில்லாங்குளம் மேல்நிலைப்பள்ளியில் மாணவி மர்ம மரணம்!

தூத்துக்குடி, செப். 21 தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடா ரம் அருகே உள்ள பசுவந்தனை சில்லாங்குளத்தில் முத்துக்கருப்பன் நினைவு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி யில் 3,000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் பின் புறம்  மாணவியர் விடுதி உள்ளது. இவ்விடுதி யில், 800 மாணவிகள் பல்வேறு மாவட்டங் களில் இருந்து தங்கி பயின்றுவருகின்றனர். அப்பள்ளியின் விடுதியில் தங்கி யிருந்து படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம், அண்டக்குடி கிராமத்தினை சேர்ந்த ராமநாதன் மகள் வைத்தீஸ்வரி (17),  என்பவர் செவ்வாய் இரவு மர்மமான முறை யில் அங்குள்ள கழிவறையில் கயிற்றி னால் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். மாணவி வைத்தீஸ்வரி தூக்கில்  தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் கண்ணீர்விட்டு கதறி யுள்ளனர். பின்னர், ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  பசுவந்தனை காவல்துறையினர் மாணவி யின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக் காக கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  புதனன்று காலை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் மாணவியின் பெற்றோரிடம் ஆறுதல் கூறினர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், 12ஆம்  வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீ சார் மூலம் விசாரணை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் என்றார்.   மேலும், மாணவியின் பெற்றோரிடம் கூறுகையில், மாணவி மரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நட வடிக்கை எடுக்கப்படும். மேலும், மாணவி யிடம் கடிதம் ஒன்று இருப்பதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தாண்டாயுதபாணி, மாவட் கல்வி அலு வலர் (பொறுப்பு) தமிழ் செல்வி, ஒட்டப்பிடா ரம் தாசில்தார் நிஷாந்தினி, மாவட்ட கூடு தல் கண்காணிப்பாளர் ஏ.டி.எஸ்.பி  சந்திஸ், மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ் வரன் ஆகியோர் உடனிருந்தனர்.

;