tamilnadu

அடுத்த ஜனாதிபதி சியாமரோ காஸ்ட்ரோ ஹோண்டுரசில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தெகுசிகல்பா, டிச. 22-  நவம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற ஹோண்டுரஸ் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில், “17 லட்சத்து 16 ஆயிரத்து 793 வாக்குகள் சியாமரோ காஸ்ட்ரோவுக்குப் பதிவாகின.  லிப்ரே கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சியாமரோ காஸ்ட்ரோ, ஹோண்டுரஸ் குடியரசின்  அரசியல் சட்ட ரீதியான ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டோர் என்று அறிவிக்கி றோம். ஜனவரி 27, 2022 முதல் ஜனவரி 27, 2026 வரையிலான காலகட்டத்திற்கு இவர் ஜனாதிபதியாக இருப்பார் “ என்று கூறப்பட்டுள்ளது.

 நவம்பர் 28 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் லிப்ரே கட்சியின் தலைவர் சியாமரோ காஸ்ட்ரோவுக்கு  அடுத்த இடத்தை தேசியக் கட்சி யின் வேட்பாளரான நஸ்ரி அஸ்புரா பிடித்துள்ளார். அவருக்கு 12 லட்சத்து 40 ஆயிரத்து 260 வாக்குகள் கிடைத்தன. 3 லட்சத்து 35 ஆயிரத்து 762 வாக்குகளுடன் லிபரல் கட்சியின் வேட்பாளர் யாதிரா பெந்தனா, மூன்றாவது இடத்தில் இருந்தார். 100 விழுக்காடு வாக்குகள் எண் ணப்பட்டு விட்டதால் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹோண்டுரஸ் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளியானவுடன் வெளி யிடப்பட்ட செய்திக்குறிப்பில், “17 லட்சத்து 16 ஆயிரத்து 793 பேர் வாக்களித்து என் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தி யிருக்கிறார் கள். சர்வாதிகார ஆட்சியை அகற்றி நேரடி மற்றும் அனைவரும் பங் கேற்கும் ஜனநாயகமாக மாற வேண்டும் என்பதற்காக இந்த வாக்குகள் விழுந்துள்ளன.

 இனிமேல் ஊழலுக்கு இடமில்லை. நாங்கள் ஏற்கெ னவே இதற்கான பணியைத் துவங்கி விட்டோம்” என்றார். 52 லட்சம் வாக்காளர்களில் 68.55 விழுக்காட்டினர் வாக்களித்த னர். ஜனாதிபதியை மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களாக 128 பேரையும் அதே நாளில் தேர்வு செய்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் சியாமரோ காஸ்ட்ரோ தலைமையிலான லிப்ரே கட்சிக்கு 50 இடங்கள் கிடைத்துள்ளன. சில சகோதரக் கட்சிகளோடு இணைந்து நாடாளு மன்றத்தை சுமுகமாக நடத்த முடியும் என்று காஸ்ட்ரோ நம்புகிறார்.  இடதுசாரி வேட்பாளர்களின் வெற்றி தொடர்வதால் தென் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளுக்கு இடையிலும் நல்ல உறவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலி வெற்றிச் செய்தி பல்வேறு நாடுகளில் கொண்டாட்டங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

;