tamilnadu

img

வாழ்ந்தாலும் வரி, செத்தாலும் வரி; மோடி ஆட்சியை விட்டு வைக்கலாமா?

சென்னை, செப்.6- மோடி ஆட்சியில் வாழும் போதும்  வரி, இறந்தாலும் வரி என மனிதத்தன்மை யற்ற வரிக் கொள்கை பின்பற்றப்படு கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பி னர் பிரகாஷ் காரத் சாடினார். “இந்தியாவின் இருள் அகற்று வோம்; மோடி ஆட்சிக்கு முடிவு கட்டு வோம்” எனும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின் நிறைவு பொதுக்கூட்டம் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் சத்தி யமூர்த்தி நகரில் திங்களன்று (செப். 5) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியதாவது:

வாங்கும் சக்தி வீழ்ச்சி

விலைவாசி உயர்வாலும், பண வீக்கத்தாலும் நாட்டு மக்களின் வாழ்வா தாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழ்க்கைத் தரம் சரிந்து கொண்டே வரு கிறது. சாதாரண ஏழை எளிய, நடுத்தர, உழைப்பாளி மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதை குறைத்துக் கொண்டே வருகிறார்கள். மோடி ஆட்சியில் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி  உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும் செஸ்  வரி என்று தனியாக விதிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு விதிக்கப் படும் செஸ் வரி 27 ரூபாய். ஒரு லிட்டர்  டீசலுக்காக விதிக்கப்படும் செஸ் வரி 22 ரூபாய். செஸ் வரி மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் ஒன்றிய அரசு மட்டுமே எடுத்துக்கொள்கிறது. அத னால்தான் செஸ், சர்சார்ஜ் என விதவித மாக வரி விதிக்கிறார்கள். இதனால் தான்  பெட்ரோல், டீசல் விலைதொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் மீது வரிகளை உயத்தும் போது அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலையும் சங்கிலி தொடர் போல் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

அரசின் கடுமையான வரிக்  கொள்கைகள்தான் கடுமையான விலை வாசி உயர்வுக்கும், பணவீக்கத்திற்கும் காரணம். 2021 - 2022ஆம் ஆண்டில் மட்டும் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட வரி யின் மூலம் ஒன்றிய அரசுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. கார்ப்பரேட், பெரு நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த வரியை குறைத்துள் ளனர். இதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ஏழை எளிய உழைப்பாளி மக்கள் மீது வரியை சுமத்துகிறார்கள். எனவேதான் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் செஸ் வரி, சர்சார்ஜ் வரிகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோருகிறோம். இதை ரத்து செய்தால் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்ட கோடிக்கணக்கில் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரும் பணக் காரர்களுக்கும் முறையாக வரி விதி யுங்கள் என்று கூறுகிறோம். இந்த வரிக்  கொள்கையில் வர்க்கப்பாகுபாடு உள்ளது. பெரும் பணக்காரர்களுக்கு வரியை குறைத்து ஏழை எளிய உழைப் பாளி மக்கள் மீது வரியைத் திணிக் கிறார்கள்.  அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களும் சாதாரண பாக்கெட் செய்திருந்தாலே அதன் மீது 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி.  இதனால் உணைவுப் பொருட் களின் விலை கடுமையாக உயரும். உண வின் மீது வரி விதிப்பது என்பது மிக மோச மான நடவடிக்கையாகும். மக்கள் அன்றா டம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் மீதும் வரி விதிக்கப்படுகிறது.

மனிதத் தன்மையற்ற மோடி அரசு 

ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போதும் ஜிஎஸ்டி, கேன்சல் செய்தாலும் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற தகவல் வந்துள்ளது. அதேபோல் ஒருவர் இறந்து சுடுகாட்டிற்கு கொண்டு சென்றால் அந்த கட்டணத்திற்கும் ஜிஎஸ்டி வரி. இதற்கு மக்களிடையே கடுமையான எதிர்ப்பு வந்தவுடன், நிதி யமைச்சர் மக்களவையில் உடலை புதைக் கும் அல்லது எரிக்கும் கட்டணத்தின் மீது  ஜிஎஸ்டி வரி கிடையாது; ஆனால் புதிய சுடுகாடு, இடுகாடு உருவாக்கப்பட்டால் அந்த கட்டணத்தின் மீது ஜிஎஸ்டி வரி  விதிக்கப்படும். வாழும் போது நமக்கு தேவையான அத்தியாவசிய பொருட் களின் மீது வரி, இறப்பிற்குப் பிறகு சுடு காடு, இடுகாடு கட்டணத்திற்கு வரி. வாழும் போதும் ஜிஎஸ்டி, இறந்த பிறகும் ஜிஎஸ்டி. இது மனிதத்தன்மையற்ற மிகக் கொடுமையான வரிக் கொள்கை என்று கூறினார்.

கூட்டுக் களவாணிகள்

கார்ப்பரேட்- வகுப்புவாத கூட்டணி தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. உலக பணக்காரர் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த கவுதம் அதானி 3ஆவது இடத்தை பிடித்துள் ளார். முதல் இரண்டு இடத்தில் அமெரிக்க பணக்காரர்கள் உள்ளனர். அவர் மோடியின் சொந்த மாநிலமான குஜ ராத்தை சேர்ந்தவர். மோடி ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டு அதானியின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய்.  தற்போது 8 ஆண்டுகால மோடி ஆட்சி யில் அதானியின் சொத்து 11 லட்சம்  கோடியாக அதிகரித்துள்ளது. அதே போல் முகேஷ் அம்பானியின் சொத்து 9 லட்சம் கோடி ரூபாய். 8 ஆண்டுகால மோடி ஆட்சியில் இரண்டு தனி நபர்கள் மட்டும் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர்களாக மாறியுள்ளனர். மோடி அரசின் கொள்கைகள்தான் இதற்கு காரணம். இதைத்தான் கூட்டுக் களவாணி முதலாளித்துவம் என்று கூறு கிறோம்.

வேலையின்மை

கடந்த 8 ஆண்டுகளில் வேலை யின்மை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 20 முதல் 24 வயதிற்குட்பட்ட இளை ஞர்களின் வேலையின்மை 42 விழுக்கா டாக உள்ளது. எதிர்காலம் இருண்டு, மங்க லாகத்தான் இருக்கும் என்பதை இந்த புள்ளிவிவரம் வெளிப்படுத்துகிறது.  வேலையின்மை, விலைவாசி உயர்வு இரண்டும் இணையும் போது உழைப் பாளி மக்கள் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள். இதற்கு நம் தலைவிதி காரணமல்ல. அரசின் தவறான கொள்கை களும், கார்ப்பரேட் ஆதரவு கொள்கை களும்தான் காரணம். ஜனநாயக உரிமைகளையும், முறைமைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நடத்திக் கொண்டே, அரசின் தவறான கொள்கைகளுக்கு எதி ராகப் போராட வேண்டும். பாஜக மோடி  ஆட்சியில் ஜனநாயகத்தின் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சி யாக மதச்சார்பின்மையின் மீதும், கூட்டாட்சி கோட்பாட்டின் மீதும் தாக்கு தல் தொடுக்கப்படுகிறது. எதிர்க்கட்சி யினர் இலக்கு வைத்து தாக்கப்படு கிறார்கள். பாஜக அல்லாத எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. தமிழகத்தில் திமுக, கேரளாவில் இடது முன்னணி அரசு உள்ளிட்ட பாஜக அல்லாத அரசுகள் மோடி அரசின் கொள்கைகளை எதிர்க்கிறார்கள் என்பதால் அந்த மாநி லத்திற்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்  படுகிறது. இதனால் மாநில அரசுகள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்ற முடியவில்லை.

 மாநில அரசுகளின் உரிமை பறிப்பு 

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வந்த போது,  மாநில அரசுகளுக்கு பெரும் இழப்பு ஏற்  படும் என்ற போது, எந்தெந்த மாநிலத்திற்கு  இழப்பு வருகிறதோ அந்தந்த மாநிலங்க ளுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்  படும் என்று கூறினார்கள். எங்களுக்கு இழப்பீடு அதிகம், எனவே 5 ஆண்டுகளுக்கு  மட்டும் வழங்கினால் போதாது இன்னும் கூடு தல் ஆண்டுகள் வழங்க வேண்டும் என மாநி லங்கள் கேட்கின்றன. அந்த கோரிக்கையை  மோடி அரசு மறுத்து விட்டது. இதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஒன்றிய அரசு சீர்குலைத்து வருகிறது. 

கேரள அரசின் மாற்றுக்கொள்கைகள்

கேரள இடது முன்னணி அரசு மக்களுக்  கான மாற்றுக் கொள்கையை நடைமுறைப் படுத்தி வருகிறது. ஒன்றிய அரசுக்கு சொந்த மான நேஷனல் பேப்பர் மில் நிறுவனத்திற்கு மூடு விழா நடத்தும் போதும் கேரள அரசு  அதை விலைக்கு வாங்கி நடத்திக் கொண்டி ருக்கிறது. கேரளாவில் பொது விநியோக  முறையின் கீழ் அனைத்து அத்தியாவசிய  பொருட்களும் குறைந்த விலையில் வழங்  கப்படுகிறது. பல்வேறு சமூக நல நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. தமிழகத்திலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பல்வேறு சமூக  நல நடவடிக்கைகள் திமுக அரசால் மேற்  கொள்ளப்படுகின்றன. மாநில அரசுகள் மாற்றுப் பாதையில் செல்லக் கூடாது என்ப தற்காக மோடி அரசு மக்கள் நல நடவ டிக்கைகளை இலவசம் என்று கேலி செய்து,  இவை நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறு கிறது. எனவே ஜனநாயகத்தின் மீதான தாக்கு தலையும், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலையும், மாநில உரிமைகள் பறிக்  கப்படுவதையும், ஒன்றிய அரசின் தவறான  கொள்கைகளையும் எதிர்த்து போராட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். இவ்வாறு  பிரகாஷ்காரத் பேசினார். அவரது ஆங்கில உரையை மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தமிழில் மொழி பெயர்த்தார். 

;