tamilnadu

img

அரசுப்பள்ளி மாணவர்க்கு காலை உணவுத் திட்டம்

மதுரை, செப்.15- அறிஞர் அண்ணாவின் 114ஆவது  பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வியாழனன்று  முதல்வர் மு.க. ஸ்டாலின்  ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார். முதல்வரின் இந்த காலை உணவுத் திட்ட தொடக்க விழா மதுரை கீழ அண்ணாதோப்பு மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:- இந்தச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்கள் எதிர்கொள் ளும் சிக்கல்களின் ஆதிமூலத்தை அறிந்து தீர்வுகள் காணப்பட வேண்டும். அந்த முயற்சிகளின் ஒரு  பகுதியாகத்தான் காலை உணவுத் திட்டத்தை ஆதிமூலம் தொடக்கப் பள்ளியில் இருந்து தொடங்கியிருக் கிறோம். பள்ளிக்குப் பசியோடு படிக்க வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப் பறைக்குச் செல்லக்கூடிய வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம்.

102 ஆண்டுகளுக்கு முன்னால்  இதே செப்டம்பர் 16-ஆம் நாள் நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவ ராக இருந்த சர்.பிட்டி தியாகராயர் சென்னை மாநகராட்சியில் குழந்தை களுக்கு மதிய உணவுத் திட்டம்  அறிமுகப்படுத்தும் தீர்மானத்தை இயற்றினார். அதாவது ஒரு நூற்றா ண்டுக்குப் பின்னர் இப்போது  (செப்.15, 2022) காலை உணவுத் திட்டம் தொடங்கப்படுகிறது. எத்தகைய நிதிச்சுமையிரு ந்தாலும் பசிச்சுமையைப் போக்க முடிவெடுத்து இந்தப் பணியை (காலை உணவு திட்டம்) நிறை வேற்றிக்கொண்டிருக்கிறோம். பள்ளிப் பிள்ளைகளுக்குக் கல்வி யுடன் சேர்த்து உணவு வழங்க  வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்க த்தை முதலில் வெள்ளிப்படுத்தினார் பண்டித அயோத்திதாசர். அவரது  பவு த்த சிந்தனையில் இது உதித்தது. திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக இருந்த வெள்ளுடை வேந்தர் தியாகராயர் சென்னை மாநக ராட்சியின் மேயராக இருந்தபோது ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் 1922-ஆம் ஆண்டு மதிய உணவு வழங்கினார்.

இந்தியா விடுதலை அடை வதற்கு சில மாதங்களுக்கு முன்பு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி ஆங்கிலேய அரசால் மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் 1955-ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்த  நேரத்தில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை திமுக தொடர்ந்து நடத்தியது. திட்  டத்தை செழுமைப்படுத்த ஊட்டச் சத்துத் திட்டத்தை 1971-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் கை யில் எடுத்தார். இதனை மேலும் விரிவுபடுத்த பெருமுயற்சி எடுத்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அதி கப்படியான மையங்களை உரு வாக்கி சத்துணவுத் திட்டத்துக்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்  தார்.

1989ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால் எம்.ஜி.ஆர்  கொண்டு வந்த சத்துணவு திட் டத்தை நிறுத்திவிடுவார்கள் என தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய் யப்பட்டது. ஆனால், ஆட்சிப் பொறுப்  பிற்கு வந்த கலைஞர் உண்மை யான சத்துணவை வழங்கப்போகி றேன் எனக்கூறி முதலில் வாரம் தோறும் ஒரு முட்டை, பின்னர் இரண்டு முட்டையும் வழங்கப்படும் என்றார். 2007-ஆம் ஆண்டு முதல் வாரத்திற்கு மூன்று முட்டை, அத்  துடன் கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, வேகவைத்த உரு ளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து வழங்கினார். 2010-ஆம் ஆண்டு முதல் வாரத்தில் ஐந்து நாட்  கள் முட்டை வழங்கினார். முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப் பழம் வழங்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கலவை சாதமாக வழங்க உத்தரவிட்டார். தற்போது காலை உணவுத்திட் டத்தின் மூலம் முதற்கட்டமாக ஒரு  லட்சத்து 14 ஆயிரம் குழந்தை களுக்கு உணவு வழங்கப்பட இருக்  கிறது. 1,545 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் முதற்கட்டமாக பயன டைவார்கள். ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.12. 75 செலவு செய்யப்  பட இருக்கிறது.  திமுக அரசு தாயுள்ளத்தோடு இந்தத் திட்டத்தை தொடங்கி யிருக்கிறது. அரசு அதிகாரிகள், ஆசி ரியர்கள், பணியாளர்களும் தாயுள் ளத்தோடு பின்பற்ற வேண்டும். உங்  கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு எத்த கைய கவனத்தோடும் கனிவோடும் உணவு வழங்குவீர்களோ, அதை விடக் கூடுதல் கவனத்தோடும் கனி வோடும் வழங்கவேண்டும். “பசியும் பிணியும் பகையும் நீங்கி  வசியும் வளனும் சுரக்க வாழ்க” என்கிறது மணிமேகலைக் காப்பி யம். அத்தகைய மாநிலமாக தமிழ்  நாடு அமைய எந்நாளும் உழைப்  போம். தமிழ்ச் சமூகத்தின் வறுமை யை அகற்ற, குழந்தைகளின் பசி யைப் போக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார். 

நிகழ்வில் பங்கேற்றவர்கள்

மதுரையில் நடைபெற்ற காலை உணவுத் திட்ட தொடக்கவிழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரிய கருப்பன், கீதாஜீவன், பெ.மூர்த்தி, சி.வி.கணேசன், பழனிவேல் தியாக ராஜன், அன்பில் மகேஸ் பொய்யா மொழி, மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன், மாநிலங்க ளவை உறுப்பினர் கிரிராஜன், வட சென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்  பினர்கள் வெங்கடேசன், பூமி நாதன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமைச்  செயலர் ஷம்பு கல்லோலிகர், முதன்மைச் செயலாளர்கள் அமுதா, காகர்லா உஷா, சிறப்புத்  திட்ட செயலாக்கத்துறை முதன்  மைச் செயலாளர் த.உதயச்சந்தி ரன், மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர், மதுரை மேயர் இந்திராணி, மாநக ராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங்  காலோன், சமூக சேவகர் கமலாத் தாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை நெல்பேட்டை யில் உள்ள அண்ணாசிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
 

;