tamilnadu

img

மிதிவண்டி வழங்கும் திட்டம் துவக்கம்

சென்னை, ஜூலை 25- தமிழ்நாட்டில் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசால் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (ஜூலை 25) சென்னை, நுங்கம்பாக்கம், மாநகராட்சி  ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத் தில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செல வில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடை யாளமாக 10 மாணவர்களுக்கு மிதி வண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மா. சுப்பிர மணியன், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, என். கயல் விழி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.