tamilnadu

img

ஆஸ்திரேலியா அபார வெற்றி

லயன் - 400 விக்கெட்டு'

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் நாதன் காபா டெஸ்டில் 4 விக்கெட் வீழ்த்தினார். 34 வயதான லயன் 101 டெஸ்டில் விளையாடி 403 விக்கெட் கைப்பற்றி வார்னே, மெக்ராத் ஆகியோ ருக்கு அடுத்தபடியாக 400 விக்கெட்டை கைப்பற்றிய 3-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார். சர்வதேச அளவில் 16-வது வீரர் என்ற பெருமை யை குறுகிய காலத்தில் பெற்றுள்ளார்.

பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொட ரின் நடப்பாண்டு சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளை கொண்ட தொடரின் முதல் ஆட்டம் பிரிஸ் பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் புதனன்று தொடங்கியது.  முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்தி ரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸ் 425ரன் கள் குவித்தது. சற்று சுதாரித்துக்கொண்ட இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் போல சொதப்பாமல் 2-வது இன்னிங்ஸ் சற்று சுதாரித்து விளையாடிய தொடக்கத் தில் நன்றாக விளையாடியது. அதாவது கேப்டன் ரூட் (89), மலன் (82) ஜோடி களத் தில் இருந்த வரை. இந்த ஜோடி வெளி யேறிய பின்பு இங்கிலாந்து வீரர்கள் அடுத்த டுத்து பெவிலியன் திரும்பினார்கள். இறுதியில் 103 ஓவர்களில் 297 ரன் களுக்கு ஆட்டமிழந்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 19 ரன்கள் நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. மிக மிக சுலப இலக்கான 19 ரன்களை நோக்கி பயணித்த ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயனாக ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் (முதல் இன்னிங்சில் சதம் - 152) தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி களை கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரே லிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை யில் உள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி அடி லெய்டு நகரில் வரும் 16-ஆம் தேதி நடை பெறுகிறது.