tamilnadu

img

பெரியார் வரலாற்றை உலகின் 21 மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு

சென்னை, செப்.26-  தமிழ்நாடு அரசின் சார்பில் பெரி யாரின் வரலாறை உலகின் 21 மொழி களில் மொழிபெயர்த்து வெளியிடத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரி வித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் கனடா வில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா மற்றும் கனடா மனிதநேய அமைப்புகள் ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாவது பன்னாட்டு மனிதநேயச் சமூகநீதி மாநா ட்டில் காணொலி மூலம் உரை யாற்றினார். பின்னர் இது குறித்துப் பேசிய அவர், ‘’பெரியார் உலகமயம் - உலகம் பெரியார்மயம்’ - என்ற உன்னதக் குறிக்கோளுடன் செயல் பட்டு வரும் திராவிடர் கழகத் தலை வர் வீரமணி கடந்த 17-ஆம் நாள்தான் ‘பெரியார் உலகம்’ என்ற மாபெரும் முன்னெடுப்பைச் செய்தார். கடந்த செப்டம்பர் 17 பெரியாரின் பிறந்தநாளை மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய வளைகுடா நாடுகள் ஐரோப்பிய நாடு கள் என உலகின் பல நாடுகள் கொண் டாடி இருக்கின்றன. இதுபோன்ற மாநா டுகள் தொடர்ச்சியாக நடந்தால் உலகம் முழுவதும் பெரியார் கொண்டாடப் படுவார் என்பதில் சந்தேகமில்லை’’ என கூறினார்.”

மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்று அறிவித்த ஒரே நாடு, கனடா! அத்தகைய நாட்டில், இந்த மாநாடு நடப்பது மிகமிக பொருத்த மானது! தமிழர்கள் அதிகளவில் வாழும்  அயல்நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கிறது”, என கூறினார். ‘’தைப்பொங்கல் வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்வித்தவர் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல்வேறு இன, மத மக்கள் வாழ சிறப்பான நாடாக கனடா உருவாகி வருவதாக அவர் சொல்லி இருந்தார். தமிழ் மரபுத் திங்கள் மசோதா கனடா நாடாளு மன்றத்தில் 2017-ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்டது, என குறிப்பிட்டார். நம்மை பெரியாரின் ஒளி இணைத்துக்கொண்டு இருக்கிறது. இந்த மாநாடு மனிதநேய சமூகநீதி மாநா டாக கூட்டப்பட்டுள்ளது. மனித நேயத்தின் அடிப்படையே சமூக நீதிதான். சமூகநீதிக் கருத்தியலே மனித நேயத்தின் அடிப்படையில்தான் உரு வாக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் திருக்குறளைத் தீட்டி இருந்தாலும் -அவரின் குறள்கள் இன்று உலகில் 125-க்கும் மேற்பட்ட மொழி களில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப் பொதுமறையாக உயர்ந்து நிற்கிறது. அதேபோல் தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் எழுதியும் பேசியும் பரப்புரை செய்தாலும் இன்றைய நாள் உலகச் சிந்தனையாளராகப் போற்றப் படுகிறார் தந்தை பெரியார் அவர்கள். அவரது நூல்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட் டுள்ளது.

;