tamilnadu

img

அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் இல்லை: அமைச்சர்

சென்னை,மார்ச் 30- சென்னை மாநக ராட்சியில் நடத்தப்பட்டு வரும் அம்மா உணவ கங்களை மூடும் எண்ணம்  இல்லை என்று அமைச்  சர் தெரிவித்தார். தமிழ்நாடு சட்ட ப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடை பெற்றது. அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, “அம்மா உணவகங்களை மூடக்கூடாது”என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித்  தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்குவதில்லை, உண வகத்திற்கு வரும் வாடிக்கை யாளர்கள் குறைந்து வருகின்றனர்” என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் கே.என்.நேரு, “அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. எந்த இடத்திலும் மூடவில்லை என்றார்.  இந்த உணவகங்களை மாநகராட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த  ஆட்சியை விட அதிக மாக நிதி ஒதுக்கி வருகிறோம்.இந்த ஆண்டு ரூ.129 கோடி நிதி ஒதுக்கி உள்ளோம்”  என்றார்.

தரமில்லா உணவா?
 முதல்வர் பதிலடி!

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “ சென்னை மாநகராட்சி யில் உள்ள அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவு குறித்து ஏராளமான புகார்கள் வருகிறது” என்றார். மீண்டும் குறுக்கிட்ட முதலமைச் சர், “வேண்டுமென்றே சில பத்திரி கைகள் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். இது போன்று செய்திகளை உண்மை என்று  எதிர்க்கட்சித் தலைவர் பேசக்கூடாது.   எந்த இடத்திலுள்ள அம்மா உணவ கத்தில் உணவு தரம் இல்லை  என்பதை ஆதாரத்துடன் குறிப்பிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்கா வது தவறுகள் நடக்கலாம், எந்த  இடத்தில் என்பதை தெரிவித்தால்,  உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.