tamilnadu

img

லெனின் - தொழிலாளி - விவசாயி கூட்டணியின் சிற்பி - டாக்டர் அசோக் தாவ்லே

லெனின் அவர்களால் முன்னெடுத்துக் கொண்டு வரப்பட்ட “தொழிலாளர் - விவசாயக் கூட்டணி” என்னும்  கோட்பாடு மற்றும் நடைமுறை ரஷ்யாவில் மட்டுமல்ல சீனா, வியட்நாம், கொரியா மற்றும் கியூபாவிலும் வெற்றிகரமான சோசலிசப் புரட்சிகளுக்கு வழிவகுத்தது. 

- டாக்டர் அசோக் தாவ்லே

புகழ்பெற்ற ஹங்கேரிய மார்க்சியவாதியும், “வரலாறு மற்றும் வர்க்க உணர்வு” என்ற நூலின் ஆசிரியருமான ஜார்ஜ்           லூகாஸ், லெனினை “பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டத்தால் இதுவரை உருவாக்கப்பட்ட மார்க்சுக்கு இணையான ஒரே கோட்பாட்டாளர்” என்று அழைத்தார். லெனினை அவர் மறைந்த நூற்றாண்டு விழாவில் 2024 இல் நாம் நினைவு கூர்கிறோம். கொள்கை மற்றும் நடைமுறை, இயக்கம் மற்றும் அமைப்பு - ஆகியவற்றின் மிகவும் அரிய ஒருங்கிணைப்பாக, உலகின் முதல் வெற்றிகரமான சோசலிசப் புரட்சியை வழிநடத்தி, எல்லா முரண்பாடுகளையும் எதிர்கொண்டு, அதைப் பாதுகாத்தார். அந்தப் பணியை சாதிக்க ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை கட்டி எழுப்பியதுதான் லெனினின் மிகச்சிறந்த சாதனையாகும்.

மார்க்சிசத்திற்கு லெனின் வழங்கிய பல அடிப்படை யான தத்துவார்த்த பங்களிப்புகளில் மிக முக்கியமானது, ஒரு சோசலிசப் புரட்சிக்கான தொழிலாளர் -விவசாயி  கூட்டணி என்னும் கருத்துருதான் முன்னோடியானதா கும். அவர் கோட்பாட்டு ரீதியாக இந்த கருத்தை முன்  வைத்தது மட்டுமின்றி, தானும் ரஷ்யாவில் அக்டோபர்  புரட்சியின் வெற்றிக்காக, விவசாயி - தொழிலாளி கூட்ட ணியை எதார்த்தமாக்குவதற்கு நடைமுறையில் உழைத்தார். மேலும் சோசலிசத்தை கட்டி எழுப்பு வதற்காக அதை பராமரித்தார்.

கருத்தாக்கத்தின் பரிணாம வளர்ச்சி

மார்க்சும், ஏங்கல்சும் தங்களின் சிறப்பான எழுத்துக்  களில், முக்கியமாக ஐரோப்பாவில் ஒப்பீட்டளவில் முன்னேறி இருந்த தொழில்துறை முதலாளித்துவ நாடு களில் உள்ள பாட்டாளி வர்க்க - தொழிலாளி வர்க்கத்தின்  மீது கவனம் செலுத்தினர். முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறும், தீவிரமான சமூக மாற்றத்திற் கான போராட்டத்திற்கு, பாட்டாளி வர்க்கம் தலைமையை  ஏற்கும் என்று அவர்கள் அறிவித்தனர். அவர்கள் சமூ கத்தின் வெவ்வேறு அடுக்குகளில் இருந்த விவசாயி களின் பங்கினையும், நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களையும் நிச்சயமாக கணக்கில் எடுத்துக் கொண்டனர். தொழிலாளி வர்க்கத்தால் வழிநடத்தப்பட்ட வீரம்  செறிந்த 1871 பாரிஸ் கம்யூனுக்கு எதிராக, விவசாயி களின் ஆதரவை பிரெஞ்ச் முதலாளித்துவம் பெற  முடிந்தது என்பதே அதன் தோல்விக்கு முக்கியமான கார ணங்களில் ஒன்று என்று அனுபவம் உணர்த்துகிறது. முதலாளித்துவ சொத்துக்கள் மீது தொழிலாளி வர்க்கம் தாக்குதல் நடத்தியது என்பது பிறகு மீண்டும் விரிவடைந்து விவசாயிகளின் சொத்துக்களின் மீதும் தொடரும் என்ற அச்சத்தை உருவாக்கி இந்த ஆதரவு  திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மார்க்சும், ஏங்கல்சும் விவசாயிகளின் நேர்மறையான சக்தியை அறிந்திருந்தனர். 1856 ஏப்ரல் 16இல் ஏங்கல்சுக்கு, மார்க்ஸ் எழுதிய கடிதத்தில் இது  தெளிவாகிறது. அதில் அவர் கூறுகிறார்: “ஜெர்மனியின் முழு விஷயமும், பாட்டாளி வர்க்க புரட்சியை விவ சாயப் போரின் இரண்டாவது வடிவமாக ஆதரிக்கும் அதன் சாத்தியத்தை பொறுத்தது. அதன் விளைவுகள் மிகச் சிறப்பானதாக இருக்கும்.” லெனின் இந்த அவ தானிப்பை மிக ஆரம்பத்திலேயே தீவிரமாகக் கொண்டி ருந்தார். மேலும் 1923 மே 30 அன்று பிராவ்தாவில் முதன்  முதலில் வெளியிடப்பட்ட “நமது புரட்சி” என்ற தனது வாழ்வின் கடைசி கால கட்டுரைகளின் ஒன்றில் அதை  மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார். லெனின் தனது 26ஆவது வயதில் “ரஷ்யாவில் முத லாளித்துவத்தின் வளர்ச்சி” என்ற நூலை 1896இல் எழுதி னார். அந்தப் புத்தகத்தில் அவர் பாட்டாளி வர்க்கம்  மற்றும் விவசாயிகளின் புரட்சிகர சக்தியை அடிக் கோடிட்டு காட்டினார். 1901 ஆம் ஆண்டிலேயே “தொழிலாளர் கட்சியும் விவ சாயிகளும்” என்ற தனது கட்டுரையில் லெனின் தொழி லாளி வர்க்கப் போராட்டங்களின் புரட்சிகர நோக்கத்தை  பற்றி பேசுகிறார். பின்னர் எழுதினார்: “பல லட்சக் கணக்கான விவசாயிகளிடையே, வர்க்கப் போராட்டம் மற்றும் அரசியல் உணர்வை விதைக்காமல் இந்த இலக்கை அடைய முடியுமா? இந்த விதைகளை விதைப்பது சாத்தியமில்லை என்று யாரும் கூற வேண்டாம்! ஏற்கனவே ஆயிரக்கணக்கான வழிகளில் இது செய்யப்படுகிறது.. அது நம் கவனத்திற்கும் செல்வாக்கிற்கும் வரவில்லை”.

1903ஆம் ஆண்டில் லெனின் தனது “நாட்டுப்புற ஏழைகளுக்கு” என்ற புத்தகத்தின் மூலம் இந்த மையப் பொருளை பெரிதும் விரிவுபடுத்தினார். இது இன்றும் அதன் தாக்கத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தொழிலாளர் - விவசாயி கூட்டணியின் இரட்டை நோக்கம்: ஜார் ஆட்சியால் நசுக்கப்பட்ட 1905 முதல் ரஷ்யப் புரட்சி, மதிப்புமிக்க படிப்பினைகளை கொடுத்துள்ளது. அப்போதுதான் போல்ஷ்விக்கட்சி “பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் புரட்சிகர  ஜனநாயக சர்வாதிகாரம்” என்ற முழக்கத்தை முன்  வைத்தது. இது மார்க்சியத்தின் மதிப்பு மிக்க கொடை யாக இருந்தது. உறுதியான நிலைமைகளின் ...உறுதி யான பகுப்பாய்வுகளின் அடிப்படையில் லெனின் முன்வைத்த இந்த புதிய முழக்கத்திற்கான அடிப்படை பகுப்பாய்வு மற்றும் விவாதம் பின்வருமாறு:

ஆரம்ப கால முதலாளித்துவத்திற்கும், பிற்கால முத லாளித்துவத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருந்தது. ஆரம்பகால முதலாளித்துவத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் முதலாளித்துவத்தின் தலைமை யில் 1789இல் நடந்த பிரஞ்சு புரட்சி நிலப்பிரபுத்துவத்தை அடித்து நொறுக்கியது. மற்றும் நிலப்பிரபுக்களின் நிலங்களை விவசாயிகளிடையே மறு விநியோகம் செய்தது. ஆனால் பிந்தைய முதலாளித்துவத்தில் உரு வான முதலாளித்துவம், ரஷ்யாவிலும் பிற இடங்களி லும் அதன் முந்தைய வீரியத்தை இழந்துவிட்டது. நிலப்பிரபுத்துவத்திற்கு அதனால் மரண அடி கொடுக்க  முடியவில்லை.  உண்மையில் விவசாயிகளின் ஜனநாயக அபிலாசை களை விரக்தி அடையச் செய்து, நிலப் பிரபுத்துவ கட்ட மைப்புடன் சமரசம் செய்து கொள்ள முயன்றது. வளர்ந்து  வரும் தொழிலாளி வர்க்கம் அதை அச்சுறுத்தியது. நிலப்பிரபுக்களின் சொத்துக்களை தாக்கினால், அதன்  விளைவாக முதலாளிகளின் சொத்துக்களின் மீதும்  உழைக்கும் மக்களின் மறு தாக்குதலுக்கு இது வழி வகுக்கும் என்று முதலாளித்துவம் பீதி அடைந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் லெனின், “தொழி லாளி வர்க்கத்தின் தலைமையிலான தொழிலாளர் - விவ சாயி கூட்டணி” என்ற கருத்தை முன் வைத்தார். இது  ஜனநாயக (நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு) புரட்சியை நிறைவு  செய்வது மட்டுமல்லாமல், பின்னால் ஒரு சோசலிசப் புரட்சி (முதலாளித்துவ எதிர்ப்பு) வரை முன்னேறும் எனக்  கருதினார். எனவே 1905இல் எழுதப்பட்ட “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு தந்திரோ பாயங்கள்” என்ற தனது புகழ்பெற்ற புத்தகத்தில் லெனின்  பின்வரும் முடிவை எடுத்தார்:

பாட்டாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியை முழுமைக்கு இட்டுச் செல்ல வேண்டும். அதற்கு அது வெகு விவசாயிகளுடன் தன்னை அணி சேர்த்துக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை படைபலம் மூலம் நசுக்கு வதுடன் முதலாளித்துவத்தின் அடித்தளத்தை நிலை குலையச் செய்ய வேண்டும். சோசலிசப் புரட்சியை வெற்றி யடையச் செய்ய பாட்டாளி வர்க்கம் சாதாரண அடித்தட்டு பாட்டாளி மக்களுடன் அணி சேர்ந்து முத லாளிகளை படைபலம் மூலம் நசுக்கி, பெரு விவசாயி கள் மற்றும் குட்டி முதலாளிகளையும் நிலை குலையச்  செய்ய வேண்டும். தொழிலாளர் - விவசாயி கூட்டணியை வலுப்படுத்து வதற்கான அடிப்படைக் கோட்பாட்டின் அடிப்படையில் லெனினும், போல்ஷிவிக் கட்சியும் பல தீவிரமான கொள்கை நிலைப்பாடுகளையும், நடைமுறை நட வடிக்கைகளையும், குறிப்பாக அக்டோபர் புரட்சிக்கு பிறகும் அது அதிகாரத்தில் இருந்த போதும் தொடர்ந்து எடுத்தது. ரஷ்ய புரட்சியின் உன்னதமான பேரணி முழக்கமான  “அமைதி! நிலம்! ரொட்டி! இது பாட்டாளிகளின் ஒற்றுமை யை எதிரொலித்தது! தொழிலாளர்கள் – விவசாயிகள் - மற்றும் சிப்பாய்களின் சோவியத்துக்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டன. மேலும் அவர்களின் பிரதிநிதிகள் (deputies)மாநாடுகளில் ஒன்று கூடினர். 1923 மார்ச் 2 தேதியிட்ட லெனினின் கடைசி கட்டுரையான” “சிறந்தது  குறைவானது ஆனால் சிறந்தது” (Better Fewer, But Better). இது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பணிகளை ஆய்வு செய்தது. லெனின் எழுதினார்: தொழிலாளர்கள் விவசாயிகளின் தலைமையை தக்க வைத்துக் கொள்ளும் - விவசாயிகளின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ளும், ஒரு அரசை கட்டி எழுப்ப நாம் பாடுபட வேண்டும். மேலும் மிகச்சிறந்த பொரு ளாதார நிலையை கடைப்பிடிப்பதன் மூலம் நமது சமூக  உறவுகளில் இருந்து ஊதாரித் தனத்தின் ஒவ்வொரு தடயத்தையும் அகற்ற வேண்டும்.

ஏகாதிபத்தியம் மற்றும் புதிய சவால்கள்

லெனின் 1916 இல் “ஏகாதிபத்தியம்” என்ற அதே  பெயரில் உள்ள நூல் மூலம் ஏகாதிபத்தியம் பற்றிய ஒரு  சிறந்த பகுப்பாய்வை மேற்கொண்டார். இன்று ஒரு  நூற்றாண்டு ஆன பின்பும் லெனினால் அன்று கோடிட்டு  காட்டப்பட்ட ஏகாதிபத்தியத்தின் அடிப்படை குணாம்சங்  களான சுரண்டல், கொள்ளை, ஏற்றத்தாழ்வுகள், போர்கள், அழிவுகள் இன்று மேலும் வலுப்பெற்றே உள்ளன. சர்வதேச நிதி மூலதனம் வெறித்தனத்துடன் செயல்படுகிறது. போர்களாலும், பஞ்சங்களாலும் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படுகின்றனர். புவி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு காரண மாக பூமிக் கிரகமே பெரும் ஆபத்தில் சிக்கிக் கொண் டுள்ளது. லெனின் அவர்களால் முன்னெடுத்துக் கொண்டு வரப்பட்ட “தொழிலாளர் - விவசாயக் கூட்டணி” என்னும்  கோட்பாடு மற்றும் நடைமுறை ரஷ்யாவில் மட்டுமல்ல சீனா, வியட்நாம், கொரியா மற்றும் கியூபாவிலும் வெற்றி கரமான சோசலிசப் புரட்சிகளுக்கு வழிவகுத்தது. இந்த  நாடுகள் ஒவ்வொன்றிலும் புரட்சிகரப்படைகள் முத லாளித்துவ நிலப்பிரபுகளுக்கு எதிராக போராடியது டன் அவர்களுக்கு பின்னணியாக இருந்த ஏகாதி பத்தியத்தை எதிர்த்தும் போரிட்டன. ஏகாதிபத்திய உலக மயமாக்கல் மற்றும் நவ தாராள வாதத்தின் புதிய சகாப்தத்தில் நவ - பாசிச, பேரினவாத, வகுப்புவாத மற்றும்  இனவாத போக்குகள் தங்கள் அசிங்கமான தலை களை உயர்த்துவதால், ஒவ்வொரு நாட்டிலும் தொழி லாளி - விவசாயி கூட்டணியை உருவாக்கி வலுப்படுத்து வதற்கான தேவை - முக்கியத்துவம் அதிவேகமாக வளர்ந்துள்ளது. ஏனெனில் நிலப்பிரபுத்துவம் மற்றும் அதன் எச்சங்களுக்கு மேலதிகமாக, தொழிலாளி வர்க்கமும் விவசாயிகளும் இன்று நவ தாராளமயம் மற்றும் அதனால் விளைந்த தீமைகளினால் இன்னும் மோசமான தாக்குதலை எதிர்கொண்டுள்ளனர். இன்று ஒரே நேரத்தில் உற்பத்தியில் ஈடுபடும் வர்க்கங்களாகவும்  அதே நேரத்தில் சுரண்டப்படும் வர்க்கங்களாகவும் விவ சாயிகள் மற்றும் தொழிலாளிகள் உள்ளனர். இந்த இரண்டு வர்க்கங்களின் மிக வலுவான ஒற்றுமையால் மட்டுமே இதை முறியடிக்க முடியும்.

பிரபாத் பட்நாயக் எழுதுவது போல்,”மூன்றாம் உலகத்தின் பெரும் பகுதியில் ஒரு புரட்சிக்கான வாய்ப்பு  ஏற்படுவது என்பது முக்கியமாக ஒரு தொழிலாளி - விவ சாயி கூட்டணியை வெற்றிகரமாக கட்டி எழுப்புவதை பொறுத்தது. அத்தகைய கூட்டணியில்லாமல் முதலா ளித்துவத்தின் அடுத்த கட்டமான புரட்சிகர மீறல் சாத்தி யம் இல்லை. அக்டோபர் புரட்சியே அத்தகைய கூட்டணி யில்லாமல் சாத்தியம் ஆகவில்லை. இன்று நிலப்பிர புத்துவ எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியை நிறைவு செய்வ தற்கு விவசாயி - தொழிலாளர் கூட்டணி அவசியம். சமகால உலகமயமாக்கல் மூன்றாம் உலகின் பெரும்  பகுதியில் கட்டவிழ்த்துவிட்டுள்ள கடுமையான விவசாய  நெருக்கடி மற்றும் பொதுவான சிறு உற்பத்தி நெருக்கடி களை சமாளிப்பதற்கும் இத்தகைய கூட்டணியின் அவ சியம் இன்று எழுந்துள்ளது. காலனித்துவ எதிர்ப்பு போராட்டத்தின் வாக்குறுதிகளுக்கு இணங்க கால னித்துவத்திற்கு பிந்திய “சமூக பொருளாதாரத் துறை களில் அரசாங்கக் கட்டுப்பாடு உள்ள ஆட்சிகள்” (dirigist) பல்வேறு அளவுகளில் வழங்கிய ,சிறு உற்பத்தி களுக்கான அரசின் ஆதரவை, இது நீக்கியது. மேலும்  இந்த துறையை உலக அளவில் நடமாடும் பெரும் மூல தனத்தின் அத்துமீறலுக்கும், உலகச் சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கும் ஆளாக்கியுள்ளது. இந்தப் பொருளாதாரங்களில், முதலாளித்துவத் துறைகளில், வேலையாட்களுக்கான தேவையின் வளர்ச்சி மிகவும் பரிதாபகரமாக, போதுமானதாக இல்லை. தொழிலாளர் சக்தியின் இயல்பான வளர்ச்சி கூட குறைவாக இருப்பதால் சிறு உற்பத்தியில் பெரு மூலதனத்தின் இந்த அத்துமீறல் பல லட்சக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு கடுமையான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலாளித்துவத் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தியாவின் சமீபத்திய முயற்சிகள்:

2000ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட சிபிஐ(எம்)  திட்டம், பாரா 7.6 இல் கூறுகிறது. “மக்கள் ஜனநாயக முன்னணி யின் மையமும், அடிப்படையும் தொழிலாளி வர்க்கம் மற்றும்  விவசாயிகளின் உறுதியான கூட்டணியாகும். இந்த கூட்டணி  தேசிய சுதந்திரத்தை பாதுகாப்பதில் மிக முக்கியமான சக்தி யாகும். வரும் காலத்தில் ஏற்பட உள்ள ஜனநாயக மாற்றங்களை யும், அனைத்துத் துறைகளிலும் சமூக முன்னேற்றத்தை உறுதி செய்யவும், புரட்சியை முன்னெடுப்பதில் மற்ற வர்க்கங்க ளின் பங்கு முக்கியமாகிறது. தொழிலாளர் -விவசாயி கூட்டணி யின் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை அவசியமாக்கு கிறது.

இந்தியாவில் தொழிலாளர் - விவசாயி ஒற்றுமை நமது  ஏகாதிபத்திய எதிர்ப்பு சுதந்திரப் போராட்டத்திலும், தொழி லாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் முந்தைய வரலாற்றுப்  போராட்டங்களிலும் பல்வேறு புகழ் பெற்ற நிகழ்வுகளில் வெளிப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் 2018 முதல் 2023 வரை சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் நாடு தழு விய பெரிய கூட்டு நடவடிக்கைகளின் மூலம் இந்த திசையில்  சிறப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெறுக்கப்  பட்ட மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக 2020 - 21ஆம்  ஆண்டில் தேசிய அளவிலான விவசாயிகள் நடத்திய ஒரு வருட கால, பிரசித்தி பெற்ற வெற்றிகரமான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய  விவசாய முன்னணி எனும் சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் (SKM) தலைமையில் நடத்தப்பட்டது. மேலும் இதற்கு மத்திய தொழிற்சங்கங்களின் தலைமையின் கீழ் தொழிலாளி வர்க்கத்தின் நிபந்தனையற்ற ஆதரவு கிடைத்தது. இதே போல மத்திய தொழிற்சங்கங்கள் தலைமையிலான நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கும் ஐக்கிய விவ சாய முன்னணி தன் முழு ஆதரவை தந்தது. இந்த இரு வர்க்கங்களின் கூட்டுப் போராட்டம் 2024இலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.'

இருப்பினும், இவை அனைத்தும் இன்னும் ஒரு சிறு தொடக்கம் மட்டுமே ஆகும். இந்தியாவில் தற்போதுள்ள கார்ப்பரேட் – மனுவாதி - சர்வாதிகார ஆர்எஸ்எஸ்-பாஜக  அரசாங்கத்தை தோற்கடிக்கும் உடனடி இலக்கை அடைய,  மிகவும் விரிவான மற்றும் தீவிரமான கிளர்ச்சி, அரசியல், கருத்தியல் மற்றும் அமைப்பு ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். லெனின் கண்ட கனவான “தொழி லாளர் -விவசாயி கூட்டணி” என்பதை கட்டி எழுப்ப, இந்தி யாவில் உள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளால் மிகப் பெரிய தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  அது மட்டுமே நம் நாட்டில் உண்மையான, புரட்சிகர சமூக  மாற்றத்தை கொண்டு வர முடியும்.

தமிழில்: மன்னை இரா.இயேசுதாஸ்