கூகுள் மேப்ஸ் செயலியில், நகரங்களின் காற்றின் தரத்தை கண்டறியும் காற்றின் தரக் குறியீடு டிராக்கர் (Air Quality Index Tracker) அம்சம் வழங்கப் பட்டுள்ளது. உலகம் முழுவதும் காற்றின் தரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தவே கூகுள் நிறுவனம், அமெரிக்க, சிங்கப்பூர், இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கி யுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் நகரங்களில் உள்ள காற்று மாசு பாட்டின் அளவு குறித்த சமீபத்திய தகவல்களை அறிந்துகொண்டு, பய னர்கள் தங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பாதுகாத்து, தேவை யான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்ள முடியும். இந்த அம்சத்தை பயன்படுத்த முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் மேப்ஸ் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து Search ஆப்ஷனில் நீங்கள் செல்ல விரும்பும் நகரத்தின் பெயரை உள்ளிட்டு, பின்னர் Stack of Squares ஐ-கானை கிளிக் செய்ய வும். அங்கு உள்ள Air Quality ஆப்ஷனை கிளிக் செய்தால் நகரங்க ளின் காற்றின் தரத்தை தெரிந்து கொள்ள முடியும். இதில் நிறத்தை வைத்து காற்று மாசுபாட்டின் அளவை தெரிந்து கொள்ளலாம். பச்சை நிறம் என்றால் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கிய மான காற்று, மஞ்சள் நிறம் என்றால் மிதமான காற்று, ஆரஞ்சு நிறம் என்றால் உணர்திறன் கொண்ட குழுக் களுக்கு ஆரோக்கியமற்ற காற்று, சிவப்பு நிறம் என்றால் அனைவருக் கும் ஆரோக்கியமற்ற காற்று, ஊதா நிறம் என்றால் மிகவும் ஆரோக்கிய மற்ற காற்று, கருஞ்சிவப்பு என்றால் மிகவும் ஆபத்தான காற்று, கடுமை யான சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடியது.