கர்நாடகா, டிச. 28 - கர்நாடகா - மகாராஷ்டிரா மாநிலங் களுக்கு இடையிலான எல்லைப் பிரச்ச னை, உள்துறை அமைச்சர் அமித்ஷா வின் பேச்சுவார்த்தைக்குப் பின், தீவிர மடைய ஆரம்பித்துள்ளது. இரண்டு மாநில சட்டப்பேரவை களிலும் மாறி, மாறி நிறைவேற்றப்படும் போட்டித் தீர்மானங்களால், கர்நாடகா - மகாராஷ்டிரா இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில எல்லையோரத்தில் பெலகாவி, பீதர், கார்வார் ஆகிய மாவட்டங் கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் பேர் வசிக்கின்ற னர். பெரும்பாலானோர் மராத்திய மாநில பாரம்பரியத்தையே கடைப்பிடித்து வருகின்ற னர். எனினும், 1960-ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் மராத்தி மக்கள் பெரும்பான்மை யாக வசிக்கும் சில பகுதிகள் கர்நாடகா மாநில எல்லைக்குள் சென்றுவிட்டதாக மகாராஷ்டிரா அரசு கூறி வருகிறது. கர்நாடக எல்லைக்குள் உள்ள மராத்தி மொழிபேசும் 865 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என அங்குள்ள சில அமைப்புகள் நீண்ட காலமாக போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
ஆனால், ஒருபோதும் அதற்கு அனு மதிக்க முடியாது என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. அண்மையில், இவ்விவகாரத்தில் மோதல் வெடித்தது. மகாராஷ்டிர மாநில பேருந்துகள், வாகனங்கள் கர்நாட கத்தில் அடித்து நொறுக்கப்பட்டன. கல்வீசித் தாக்கப்பட்டன. இதேபோல மகாராஷ்டிரா விலும், கர்நாடக வாகனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. கர்நாடக மாநில பேருந்துகளில் கறுப்பு மற்றும் காவி வண்ணங்களை தெளித்ததோடு அதில் ‘ஜெய் மகாராஷ்டிரா’ என்றும் எழுதினர். கர்நாடக மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் உள்ளது. எனினும், இப்பிரச்ச னைக்கு தீர்வுகாணாமல் அரசியல் லாபத்திற்காக பிரதேசவாத அரசியலைத் தூண்டிவிடும் வேலையைச் செய்தது. அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு மாநில முதல்வர்களை யும் நேரில் அழைத்து பேசினார். இதற்குப் பிறகு, இந்தப் பிரச்சனை மீண்டும் எழாது; முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக, பிரச்சனை தீவிரம் எடுக்கத் துவங்கியது.
2) கர்நாடக சட்டப்பேரவையைக் கூட்டிய அம்மாநில பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிர மாநிலத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். “மகாராஷ்டிரா வேண்டு மென்றே எல்லைப் பிரச்சனையைக் கிளப்புவதாகவும், ஒரு அங்குல நிலத்தைக் கூட அந்த மாநிலத்துக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று அந்த தீர்மானத்தில் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், கர்நாடக பாஜக அரசின் தீர்மானத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மகாராஷ்டிர மாநில பாஜக கூட்டணி அரசு, செவ்வாயன்று (டிசம்பர் 27) மகாராஷ்டிர சட்டப்பேரவையில் போட்டித் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. நாக்பூரில் நடைபெற்று வரும் மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத்தில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இதுதொடர்பான கொண்டு வந்தார். “கர்நாடகத்தில் மராத்தி மொழி அதிகம் பேசும் பெலகாவி, கார்வார், பீதர், நிப்பானி, பால்கி ஆகிய நகரங்கள் மற்றும் 865 கிராம மக்களுடன் துணை நிற்க மகாராஷ்டிர அரசு உறுதிபூண்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளை மகாராஷ்டிரத்துடன் இணைக்க வேண்டும். இந்த பகுதிகளின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்” என்று தீர்மானத்தில் அவர் கூறியிருந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில், ‘ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத்தர முடியாது’ என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மீண்டும் கூறியுள்ளார். இது மகாராஷ்டிரா - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.