சிவகங்கை, செப்.30- சாதிய வர்க்க ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக் கத்தின் மூத்த தலைவர் மறைந்த தோழர் பி. சீனிவாச ராவ் அவர்களின் 61 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 30 அன்று சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா நாகநாதபுரம் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங் கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை நில அளவை செய்து தரக்கோரி குடியேறும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.லாசர் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப் பன்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலா ளர் வீரையா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்க பூபதி, வீரபாண்டி, சுரேஷ்,இளை யான்குடி தாலுகா செயலா ளர் ராஜீ மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம பெண்களும் பங்கேற் றனர். நாகநாதபுரம் கிராமம் முழுவதும் காவல்துறை யினர் குவிக்கப்பட்டிருந் தார்கள். ஆதி திராவிட நலத்துறை மாவட்ட அதிகாரி மங்கள நாதன், இளையான்குடி வட்டாட்சியர் அசோக் மற்றும் துணை வட்டாட்சி யர்கள்,வருவாய் ஆய்வா ளர், கிராம நிர்வாக அலுவ லர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில், இப் பிரச்சனை தொடர்பாக இளையான்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத் தில் நடைபெற்று வருகிற வழக்கை தீவிரப்படுத்தி விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பேரில் வரப்பெறும் தீர்ப்பின் அடிப்படையில் வீட்டுமனைப்பட்டா பெற்ற இடத்தினை மூன்று மாதத்தில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எழுத்து பூர்வமாக எழுதிக் கொ டுத்து இருதரப்பும் கையெ ழுத்துப் போட்டனர்.