கன்னியாகுமரி (தோழர் கே.வைத்தியநாதன், எஸ்.பஞ்சரத்தினம் நகர்), நவ.4- கன்னியாகுமரியில் நவம்பர் 4,5,6 தேதிகளில் நடைபெறும் சிஐடியு மாநில மாநாட்டுக்கு தலைமை வகித்து சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பேசிய தாவது: தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை முறியடிப்பதற்கான திட்டங் களை வகுப்பதற்கான மாநாடு இது. ஏற்கனவோ அகில இந்திய அளவில் 21 பொது வேலை நிறுத்தங்களை நடத்தியுள் ளோம். அதன்மூலம் இந்த அரசு யாருக்காக சேவகம் செய்கிறதோ, அவர்களது லாபத்தை முடக்க முடியும் என்பதை நிரூ பித்துக் காட்டியிருக்கிறோம். அந்த வகை யில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நடக்கும் தொழில்வாரியான போராட்டம், மாநில அளவிலான போராட்டங்கள் என அனைத்தும் தேசிய அளவில் நடக்கும் போராட்டங்களுடன் இணைந்து நடத்தப்பட வேண்டும்.
சங்கம் அமைப்பது முதலாளிகளைப் பாதுகாப்பதற்காக அல்ல. தொழிற்சங்கம் தொழிலாளிகள் பக்கம் நிற்க வேண்டும். தொழிலாளர்களுக்கு பிரச்சனை எழும்போது அவர்களுக்கு உதவ முனைப்போடு செயல் படும் சங்கங்கள் உள்ளன. அப்படிப்பட்ட தொழிற்சங்கங்களோடு நாம் இணைந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். அந்த போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டிய காலகட்டம் இது. தமிழ்நாடு தொழிற்துறையில் முன் னேறிய மாநிலம். இங்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களில் தொழிலாளர்களின் போராட்டங் களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மாநில அரசுகளும் ஒன்றிய அரசின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. நிதி ஆதாரங்கள் பறிக்கப்படுகின்றன. மாநில அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்றன. நான்கு தொகுப்புகளாக கொண்டுவரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களுக்கான விதிகளை உருவாக்க ஏராளமான நிபந்தனைகளை ஒன்றிய அரசு விதிக்கிறது. இது மாநில அர சின் உரிமையில் தலையிடுவதற்கான சூழ்ச்சி. இப்படித்தான் தமிழ்நாடு, கேரளா என பாஜக அல்லாத மாநிலங்களில் ஒன்றிய அரசு தலையிடுகிறது. பாஜகவின் கொடிய ஆட்சியை வீழ்த்தாமல் தொழிலாளர் நலன்களை பாதுகாக்க முடியாது.
கொரோனா தொற்று. அடுத்தடுத்து ஒன்றிய அரசு நடத்தி வரும் தாக்குதல் களால் எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளார்கள். போக்குவரத்து தொழிலா ளர்கள் அவர்களது ஒப்பந்தத்துக்கான முயற்சியை மேற்கொண்டார்கள். மின் வாரிய தொழிலாளர்கள் இப்போது அதற் கான முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள். மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங் களான இவற்றில் உள்ள அனைத்து தொழி லாளர்களும் ஒன்றாக சேர்ந்து அரசிடம் வலியுறுத்தியதுதான் முக்கியமானது. இந்த ஒற்றுமையை பாதுகாக்க வேண்டியுள்ளது. இன்னும் பல்வேறு பிரச்சனைகள் நிலுவை யில் உள்ளன. பழைய ஓய்வூதியம் உட்பட அளித்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற் றப்படவில்லை. அந்த கோரிக்கைகள் நிறை வேற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வாழ்த்துரை
மாநாட்டை வாழ்த்தி தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம், ஏஐடியுசி தலைவர் காசிவிஸவநாதன், எச்எம்எஸ் பொது செய லாளர் மு.சுப்பிரமணியன், ஏஐயுடியுசி தலை வர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக வரவேற்புக் குழு தலைவர் ஜி.செலஸ்டின் வரவேற்றார். பிற்பகலில் துவங்கிய பிரதிநிதிகள் மாநாட்டுக்கு அ.சவுந்தரராசன் தலைமை வகித்தார். வி.குமார் அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார். மாநாட்டை துவக்கி வைத்து அகில இந்திய தலைவர் டாக்டர் கே. ஹேமலதா பேசினார். மாநில பொதுச் செய லாளர் ஜி.சுகுமாறன் வேலை அறிக்கையும், பொருளாளர் மாலதி சிட்டிபாபு நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தொ டர்ந்து பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.