tamilnadu

img

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம்

புதுக்கோட்டை, ஜுலை 12- நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்காததைக் கண்டித்து விவசாயத் தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் மன்னவேலம்பட்டி, ஆயிப்பட்டி மற்றும் புங்கினிப்பட்டி ஊராட்சிகளில் வாழும் ஏழை மக்களுக்கு நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும், உடனடியாக வேலை வழங்கக் கோரியும் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதன்கிழமை அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம்.ஜோஷி தலைமை வகித்தார். போராட்டத்தை துவக்கி வைத்து மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டப் பொருளாளர் கே. சண்முகம், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பி னர் தேவராஜன் ஆகியோர் பேசினர்.  பின்னர், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் எம்.பிரேமாவதி, ஒன்றியக்குழுத் தலைவர் வி.ராமசாமி ஆகியோர் சங்கத் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தொடர்ந்து வேலை மற்றும் சட்டப்பூர்வ கூலியை வழங்க உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.