சென்னை, மே 9 - கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றா ண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் தங்கம் தென்னரசுவை நூற்றாண்டு விழாக் குழுவினர் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். கவிஞர் தமிழ்ஒளியின் படைப்பு கள் அவரின் கலை இலக்கிய ஆளுமை முற்போக்கு கலைமரபு மீதான தமிழ்சமூகத்தின் கவ னத்தைக் குவிப்பதற்காக பதினோறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பட்டது கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு. 2023 செப்டம்பர் 21அன்று தொடங்கும் கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவினை உலக தமிழ்சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றி னை சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்இலக்கியத்துறையுடன் இணைத்து நடத்தவிருக்கிறது. இதனோடு இணைநிகழ்வாக கவிஞர் தமிழ்ஒளியின் பண்பாட்டு செயல்பாடுகளை வெகுமக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு அமைப்புகள், அரசியல் இயக்கங்கள், கலை இலக்கிய ஆளு மைகள் பங்கேற்கும் உரையரங்கும் நடைபெற இருக்கிறது. இவைகளில் பங்கேற்று நிகழ்வி னை சிறப்பிக்க தமிழ்நாட்டு முத லமைச்சர், தமிழ்வளர்ச்சி பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச் சர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை அழைப்பதென விழாக் குழு முடிவு செய்தது. இதையடுத்து தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் பண்பாடு தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை அவரது முகாம் இல்லத்தில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு சார்பாக மதிப்புறு தலைவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன், தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன், செயலாளர் இரா.தெ.முத்து, நிர்வாகி பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் சந்தித்து பங்கேற்பதற்கான வேண்டுகோளை முன் வைத்தனர். நூற்றாண்டு விழாக்குழு சார் பான கோரிக்கைகளான, கவிஞரின் நூற்றாண்டு தொடக்கத்தை புதுச்சேரி அரசு போல தமிழ்நாடு அரசு கொண்டாடவும், தமிழ்ஒளி படைப்புகள் மீது உயராய்வு செய்திட ஏதேனும் ஒரு பல்கலைக்கழ கத்தில் அவர் பெயரில் இருக்கை உரு வாக்கிடவும் கவிஞர் தமிழ்ஒளி பெய ரில் விருது ஒன்றை நிறுவிடவும், கவிஞர் தமிழ்ஒளிக்கு சென்னை மாநகரில் பொருத்தமான இடத்தில் சிலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கைகளை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டு இவை குறித்து முதல்வரிடம் பேசவும், தமிழ் வளர்ச்சி துறை ரீதியான உரிய நடை முறைகளை மேற்கொள்வதாகவும் தன்னை சந்தித்த கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு நிர்வாகி களிடம் தெரிவித்தார்.