tamilnadu

img

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,செப். 4  “வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரண மாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் திங்களன்று (செப்.5)  அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள அறிக்கையில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென் காசி, மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக் கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத் தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்க ளில் திங்களன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் செப்.6ஆம் தேதி அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், திருச்சி ராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள் ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் செப்.7, 8ஆகிய தேதி களில் ஒருசில இடங்களில் இடி, மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம் புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக் கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

 லட்சத்தீவு – மாலத்தீவு பகுதி கள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்.6ஆம் தேதி குமரிக்கடல் பகுதி கள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாடு கடலொ ரப்பகுதிகள், மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத் தக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே அந்த நாட்களில் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 

;