tamilnadu

img

வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போரில் தீக்கதிர் - கே.எஸ்.அழகிரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான ‘‘தீக்கதிர்’’ 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் குரலாக தொடர்ந்து ஒலித்து வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தில் ஆட்சியில் இல்லாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே சென்னை, மதுரை, கோவை, திருச்சி என நான்கு பதிப்புகளைக் கொண்ட நாளிதழாக தீக்கதிரை தொடர்ந்து வெளிக்கொண்டு வருவது மகத்தான சாதனையாகும். இந்நிலையில், ஐந்தாவது பதிப்பாக நெல்லை பதிப்பு துவங்கிட முடிவு செய்திருப்பது மிகுந்த பாராட்டுக்கும், வரவேற்புக்கும் உரியது. தீக்கதிர் நாளேட்டில் வெளிவருகிற செய்திகள், மத்திய பாஜக ஆட்சியின் அவலங்களை ஆதாரப்பூர்வமாக தோலுரித்துக் காட்டி வருகின்றன. இதன்மூலம் வகுப்புவாத சக்திகளை எதிர்த்து கடுமையான பரப்புரையை தீக்கதிர் மேற்கொண்டு வருகிறது. தீக்கதிர் நாளேட்டின் ஐந்தாவது பதிப்பினை வருகிற செப்டம்பர் 22ஆம் தேதி திருநெல்வேலியில் தோழர் பிரகாஷ் காரத் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான தீக்கதிர் ஐந்தாவது பதிப்பு வெளிவருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வாழ்த்துகிறேன்.