tamilnadu

img

மின் தொழிலாளர்களின் குடும்பங்களால் முன்னெடுக்கப்பட்ட வர்க்கப் போராட்டம்

மின் தொழிலாளர்களின் குடும்பங்களால் முன்னெடுக்கப்பட்ட வர்க்கப் போராட்டம்

சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் அரசு மின் துறையை தனி யார்மயமாக்குவதற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமான போராட்டம் நடந்துள்ளது. 2025 பிப்ரவரி 1  அன்று சண்டிகர் நிர்வாகம் அரசு மின் துறையை வலுக்கட்டாயமாக தனியார்மய மாக்கி, போராட்டம் நடத்திய ஊழியர்கள் மற்றும் எதிர்ப்பு தெரிவித்த பொது மக்களுக்கு  எதிராக வழக்கு பதிவு செய்தது. மின் நுகர்வோர், நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழி லாளர்களின் நலன்களைப் பாதுகாக்க தொழி லாளர்களின் அசைக்க முடியாத போராட்டம் ஒரு தீர்க்கமான ஒப்பந்தத்திற்கு நிர்வா கத்தை ஒப்புக்கொள்ளச் செய்துள்ளது. சண்டிகர் அரசு நிர்வாகத்திற்கு அதிக லாபம் ஈட்டி தருகின்ற, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மின்சார சேவை வழங்கி வந்த மின்சாரத்துறையை தனியார்மய மாக்க சண்டிகர் நிர்வாகம் முயன்றது. சண்டிகர் மின்சாரத்துறையில் நிரந்தர தொழி லாளர்கள் 500 பேரும் ஒப்பந்த தொழி லாளர்கள் 500 பேரும் மட்டுமே இருப்பதால், அரசாங்கத்தின் தனியார் மயமாக்கும் முடிவு எளிமையாக நிறைவேறிவிடும் என ஒன்றிய மோடி அரசு கருதியது. ஆனால் சண்டிகர் மின் ஊழியர்களின் அசைக்க முடியாத உறுதியும், போராட்ட குணமும் இந்த இயக்கத்தை இந்திய தொழிற்சங்க வர லாற்றில் ஒரு மைல்  கல்லாக மாற்றி யுள்ளது.

போராட்டத்தின் தனித்துவம்

அகில இந்திய மின்சார ஊழியர்கள் கூட்டமைப்பு (EEFI) மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச பவர்மென் சங்கம் ஆகிய அமைப்பு களின் கீழ் சுமார் 60 நாட்களாக தொழி லாளர்கள் தங்கள் பணி இடங்களிலும், கோட்ட அலுவலகங்களிலும் இடைவிடாத ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அலுவலக வேலை நேரத்திற்கு முன்பும், மதிய உணவு இடைவேளையின் போதும், அலுவலக நேரம் முடிந்த பிறகும் போராட்டங்கள் தொடர்ந்தன. நிர்வாகம் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (ESMA) அமல்படுத்தியும் தொழிலாளர்களின் உறுதி குறையவில்லை

. தொழிலாளர் குடும்பங்களின் முன்னெடுப்பு

தொழிலாளர்களின் குடும்ப உறுப்பின ர்கள், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சண்டிகரின் பல்வேறு இடங்களில் தினந்தோறும் பேரணி களை நடத்தினர். குடிசை வாசிகள், கிராம மக்கள், கடை வியாபாரிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் சென்று தனியார்மய மாக்கலின் விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  பெண்கள் தலைமையில் நடந்த பிரச்சார பேரணிகளுக்கு சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் ஒரு லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இலக்குடன் பணியாற்றினர். குடியரசு தினத்தன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பங்களுடன் கூடி, தேசியக் கொடியேற்றி, பொதுத்துறை மின்வா ரியத்தை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்தனர். அரசியலமைப்பின் முகவுரை யை உரக்கப் படித்து, 20,000-க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சமர்ப்பித்தனர்.

சமூக ஆதரவின் விரிவாக்கம்

கிராமக் குழுக்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், குருத்வாரா கமிட்டிகள், விவசாயிகள் மற்றும் இளைஞர் அமைப்புகள் அனைத்தும் இணைந்து தனியார்மய எதிர்ப்பு மன்றத்தை உருவாக்கின. நாடு முழுவதும் உள்ள தொழி லாளர்களின் ஆதரவு கிடைத்தது. 2024 டிசம்பர் 31 அன்று 16 மாநிலங்களில் உள்ள  மின்சார வாரிய ஊழியர்கள் ஒரு மணி நேர வேலைநிறுத்தம் செய்தனர். ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த அறிவிப்புகளை வெளியிட்டனர்.

போராட்டத்தின் பாடங்கள்

இந்த போராட்டம் மக்கள் விரோத அரசியலை எதிர்கொள்வதற்கான வழிமுறை களை கற்றுத்தந்துள்ளது. வர்க்கப் போராட்டத்தின் அடிப்படை அரசிய லும், சித்தாந்த அம்சங்களும் வெளிப் பட்டுள்ளன.  பொதுத்துறை என்பது மக்கள் நலனுக்கான முக்கிய கருவி என்பதும், தனியார்மயமாக்கல் நாட்டின் எரிசக்தி  பாதுகாப்பிற்கு ஆபத்து என்பதும் பொதுமக்களிடையே விவாதப்பொருளாகி யுள்ளது. இரண்டு மாத போராட்டம் தனியார் நிறு வனங்களின் ஏல முயற்சிகளை முறியடித் துள்ளது. டிசம்பர் 22, 2024 மற்றும் ஜனவரி 21, 2025 ஆகிய இரு காலக்கெடுக்களும் தவற விடப்பட்டன. பாஜக அரசின் தனியார்மய திட்டத்துக்கு எதிரான இந்த வீரமிக்க போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. மின்துறை தொழிலாளர்கள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.