சென்னை, ஜூலை 31- மக்கள் தொலைக்கட்சி மீது தாக்குதல் நடத்தியதாக கூறி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், மாநில செயற்குழு உறுப்பி னர் ப.செல்வசிங் உள்ளிட்ட 85 பேர்மீது தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் உ.ரா.வரத ராஜன் மறைவு குறித்து கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி மக்கள் தொலைக்காட்சியில் அவதூறு செய்தி ஒளிபரப்பப் பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நுங்கம்பாக்கத்தில் உள்ள மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு மறுநாள் ( மார்ச் 5) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் தாக் கப்பட்டதாக கூறி கே.பாலகிருஷ் ணன், மாநில செயற்குழு உறுப்பி னர் ப.செல்வசிங், அன்றைய வட சென்னை மாவட்டச் செயலாளர் டி.கே.சண்முகம்,தென்சென்னை மாவட்டச் செயலாளர் க.பீம்ராவ் உள்ளிட்ட 85 பேர் மீது காவல்துறை யினர் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு திங்களன்று (ஜூலை 31) விசாரணைக்கு வந்த போது இருதரப்பினரும் நீதிமன்றத் தில் ஆஜரானார்கள். இருதரப்பி னரும் தாங்கள் அளித்த புகார்களை சமரசமாக தீர்த்துக்கொள்வதாக கூறினர். இதையடுத்து இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முகாந்திரம் இல்லை என்று கூறி நீதி பதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இவ்வழக்கில் குற் றம்சாட்டப்பட்ட 85 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக இந்த வழக்கில் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தி ருந்தார்.
இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் சிகரம் செந்தில் நாதன், வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், உதயகுமார், செல்வி, தமிம் அன் சாரி ஆகியோர் வாதிட்டனர். முன்னதாக இந்த வழக்கு விசா ரணையையொட்டி திங்களன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் வருகை தந்த போது அகில இந்திய வழக் கறிஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவக் குமார், துணைத்தலைவர்கள் கே. இளங்கோ, ஜி.சம்கிராஜ், மாவட்டச் செயலாளர் பா.சீனிவாசன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.