வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி

மதுரை, ஜன.22-
மதுரையில் 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு கடந்த 3 நாள்களாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி 7 வயது சிறுவன் திருமலேஷ் இன்று (வெள்ளிக்கிழமை) பலியானார். 
அவரது சகோதரர் 9 வயதான மிருத்தின் ஜெயின், டெங்கு காய்ச்சல் பாதித்து மதுரை ராஜாஜி அரசு  மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

;