செங்கல்பட்டு, ஆக.11- சென்னை அருகே கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகி னர். செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில் எஸ்.ஆர்.எம். தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. காலை, மாலை வேளைகளில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் மருத்துவ மனைக்கு செல்லும் ஊழியர்கள், மருத்துவர்கள், நோயாளிகள் என்று எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது, தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை சென்னை-திருச்சி தேசிய சாலையில் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனால், பல இடங்களில் சிக்னல் முறையாக வேலை செய்யவில்லை. இந்நிலையில் வெள்ளியன்று (ஆக. 11) காலை 10 மணிக்கு தாம்பரத்தை நோக்கி சென்ற டிப்பர் லாரி, பொத்தேரியில் சாலையை கடக்க நின்று கொண்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் மீது மோதி யது. இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கிய பவானி (40), கல்லூரி மாண வர்கள் ஜஸ்வந்த் (23), கார்த்திக் (24) மற்றும் பார்த்தசாரதி (40) என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து காவல்துறையி னர் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர்-ஆட்சியர்
இந்த விபத்தில் பலியானவர்கள் உடல்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சென்ற சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமோ. அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆ.ரா.ராகுல்நாத் உள்ளிட்டோர் 4 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். முதல்வர் இரங்கல்-நிவாரணம் இந்த நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதோடு நிவாரணமும் அறிவித்துள்ளார். சாலை விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்த்தசாரதி என்பவருக்கு ரூ. 50,000ம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.