உதகை, டிச.11- நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரியில் ராணுவ ஹெலிகாப்டர் மரங்கள் மீது மோதி தீப் பிடித்து எரிந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 ராணுவ அதி காரிகள் பலியாகினர். இந்த விபத்து குறித்து மேல் குன்னூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள் ளனர். விபத்து குறித்து விசாரிக்க காவல்துறை தரப்பில் நீலகிரி சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் விசாரணை அதிகாரியாக நிய மிக்கப்பட்டார். இவர் தலைமையிலான குழுவினர் சம்ப வத்தை நேரில் பார்த்தவர்கள், மீட்புப் பணிகளில் ஈடுபட்ட வர்கள், பொதுமக்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், கூடு தல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம் ஆகி யோர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்துக்கு சனிக்கிழ மையன்று நேரில் வந்து 3 ஆவது நாளாக விசாரணை நடத்தினர். பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.