கடலூர்,ஜூலை18- கடலூர் மாவட்டத்தில் 391தீக்கதிர் சந்தா வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி ஞாயிறன்று (ஜூலை16) நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு பேரவைக் கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கருப்பையன் தலைமை தாங்கினார். மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரையாற்றி னார். இதில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் சேகரிக்கப்பட்ட 302 ஆண்டு சந்தா, 89 ஆறு மாத சந்தாவிற்கான ரூ. 6 லட்சத்து 97ஆயிரத்து 450 ரூபாய் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கப்பட்டது.