tamilnadu

img

தோழர் பி.ராமமூர்த்தி 32வது நினைவு தினம்....

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான தோழர் பி.ராமமூர்த்தி 32வது நினைவு தினம் டிசம்பர் 15 செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது. மதுரையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினார். கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.இராமகிருஷ்ணன், சிஐடியு தலைவர்கள் மா.கணேசன், இரா.தெய்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

;