மராட்டிய மாநிலம் மும்பை ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
இதைத்தொடர்ந்து தீவிபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.