மும்பை:
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதிகளை, ஏமாற்றி வரவழைத்து, அவர்களை உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள நிஹ்லோஜ் என்ற கிராம பகுதியை சேர்ந்தவர் ராணாசிங் (23). இவரும் ருக்மினி (23) என்பவரும், காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.6 மாதங்களுக்குப் பிறகு, கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி, பெற்றோரை பார்ப்பதற்காக ருக்மினி தனியாக, அவரது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து மே 1-ஆம் தேதி ருக்மினியின் கணவர் ராணாசிங்கும் அங்கே வந்து சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், ருக்மினியின் தந்தை ரமா பாரத்தியா, உறவினர்கள் சுரேந்திர குமார் மற்றும் ஞானஷ்யத் ஆகியோருடன் சேர்ந்து தம்பதிகளை பிடித்து தனி அறைக்குள் தள்ளி, வெளி தாழ்ப்பாளிட்டு தீ மூட்டியுள்ளனர்.தம்பதிகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தம்பதியை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ருக்மினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது ராணாசிங்கிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவருடைய நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகவே மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, காதல் தம்பதி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், ருக்மினியின் உறவினர்கள் சுரேந்திர குமார் மற்றும் ஞானஷ்யத் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெண்ணின் தந்தையும், முக்கிய குற்றவாளியுமான ராமா பாரத்தியாவைவும் புனே காவல்துறையினர் தேடி வருவதாக கூறப்படுகிறது.அயோத்தியா, பைசாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.