tamilnadu

img

குலசேகரபட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் அமைக்கும் பணி தொடக்கம்

சந்திரயான் -3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி

இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

பெங்களூரு,ஜன.1- தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினத்தில் விண்வெளி ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய(இஸ்ரோ) தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் சிவன் பெங் களூரில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:  இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் அமை கிறது. இதற்காக நிலம் கையகப் படுத்தும் பணி தொடங்கியுள்ளது.  சந்திரயான் -3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற் கான திட்டக்குழு உருவாக்கப்பட்டு, பணிகள் சுமூகமாக நடைபெற்று வரு கிறது. சந்திரயான்-3 திட்டத்தில் நிலவில் தரையிறங்குவதற்கான லேண்டரும், நிலவின் தரையில் ஆய்வு செய்வதற் கான ரோவரும் இடம்பெறும். லேண்டர், ரோவர் உள்ளிட்டவற்றிற்கு 250 கோடி ரூபாயும், செயற்கைக்கோளை ஏவு வதற்கு  365 கோடி ரூபாயும் என மொத்தம் 615 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. சந்திரயான்-3 திட்டத்தை  இந்த ஆண்டே செயல்படுத்துவதற்கு  திட்ட மிடப்படுகிறது. இதற்காக 2020ஆம் ஆண்டு நவம்பரை இலக்காக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த காலஅவகாசம் அடுத்த ஆண்டு வரை செல்வதற்கு வாய்ப்புள்ளது. சந்திர யான் -2 திட்டத்தின் லேண்டர் தோல்வி யடைந்தாலும், ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அடுத்த 7  ஆண்டுகளுக்கு அது அறிவியல்பூர்வ மான தகவல்களை வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.