கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதை தொடர்ந்து, செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில், காரி மங்கலம், பாலக்கோடு, மாரண்ட அள்ளி, சாமனூர், பஞ்சபள்ளி, உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் ஏராளமான செங்கல் சூளைகள் சிறி யதும் பெரியதுமாக செயல்பட்டு வந்தது. இந்த செங்கல் சூளை களில் பல்வேறு பணிகளில் ஆயிர ரகணக்கான தொழிலாளர்கள் ஈடு பட்டு வருமானம் ஈட்டி வந்தனர். பலர் மாத கணக்கில் குடும்பத் தோடு செங்கல் சூளைகளிலேயே தங்கி சூளை பணிகளில் ஈடுபட்டும் வந்தனர். கட்டிட பணிகள் அதிகம் நடக்கும் சமயங்களில் செங்கல் லிற்கு தட்டுபாடு ஏற்படும் சமயங் களில் இரவு பகல் பாராமல் செங்கல் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டு கூடுதல் வருமானத்தையும் ஈட்டி வந்தனர்.
இந்த நிலையில் நாடு முழு வதும் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதை தொடர்ந்து, முற்றிலுமாக செங்கல் சூளைகள் முடங்கி போனது.செங்கல் சூளைகள் முடங்கி யதால், இதனையே நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர் கள் வேலையிழந்து வருமான மின்றி தவிக்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளனர். மற்றொருபுறம் கட்டுமான பணிகளும் பாதிக்கப் பட்டுள்ளதால், செங்கல் சூளை பணி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முடங்கியுள்ளது. தற்போது குறைந்தளவு தொழி லாளர்களை கொண்டு தனிமனித இடைவளியுடன் பணியை துவங் கினாலும், அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையால் தொழில் பாதிப்படைந்துள்ளது. இந் நிலையில், தொடர்ந்து கொரானோ ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டால், இத்தொழிலையே நம்பியுள்ள ஆயி ரகணக்காணோரின் வாழ்வாதரம், அடுத்து என்ன ஆகுமோ என்ற அச்சம் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து சாமனூர் பகுதி யைச் சேர்ந்த கூலிதொழிலாளி கள் கூறுகையில், செங்கல் சூளை யில் வரும் வருவாயை வைத்து தினமும் சாப்பிட்டும், குழந்தை களை படிக்க வைத்தும் வந்தோம். கடந்த ஒரு மாதத்திற்கு மேல் உற்பத்தி இல்லாததால் வரு வாய் இழந்து வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு சாப்பாட்டிற்கு வழியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வட்டிக்காக வாங்கிய கடனை கட்ட சொல்லி ஒருபுறம் நெருக்குகிறார்கள். செங்கல் சூழையே நம்பியுள்ள எங்க ளுக்கு வேறு தொழிலும் தெரி யாது. எனவே, இத்தொழிலையே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தி குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ. 5 ஆயி ரம் நிவாரணமாக வழங்க வேண் டும் என மாவட்ட நிர்வாகத்தையும், அரசையும் வலியுறுத்தியுள்ளனர். (ந.நி)