திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

கொரோனா வைரஸால் பேட்மிண்டன் உலகில் சலசலப்பு

விளையாட்டு உலகின் முக்கிய துறையாக இருப்பது பேட்மிண்டன் என அழைக்கப்படும் இறகுப்பந்து விளையாட்டு. அதிரடிக்குப் பெயர் பெற்ற இந்த விளையாட்டு பேட்மிண்டன் உலகின் பல பகுதியில் விளையாடப் பட்டாலும் ஆசியக் கண்டத்தில் மிகவும் பிரபலமானது.  ஜெட் வேகத்தில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பேட்மிண்டன் துறையில் நடைபெறும் அனைத்து சர்வதேச ஆட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் மார்ச் மாதத்தின் முதல் சர்வதேச தொடரான ஜெர்மனி தொடர் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. ஜெர்மனியைத் தொடர்ந்து கிரீஸ், போர்ச்சுக்கல், இஸ்ரேல் போன்ற நாடுகளும் சர்வதேச பேட்மிண்டன் தொடரை ரத்து செய்தன.

ஆனால் ஜமைக்கா, இங்கிலாந்து, பெரு ஆகிய நாடுகள் சர்வதேச பேட்மிண்டன் தொடரைத் தொடர்ந்து நடத்தி யது. இது பேட்மிண்டன் உலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஜமைக்கா மற்றும் பெருவில் இன்னும் கொரோனா தனது ஆட்டத்தைத் தொடங்கவில்லை. அதனால் அந்த நாடுகள் பேட்மிண்டன் தொடர் நடத்தியது சர்ச்சையாக எடுத்துக்கொள்ள முடியாது.  இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் லேசாக இருந்தாலும் தனக்கு அருகில் உள்ள பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின்  பலத்த சேதாரத்தைச் சந்தித்ததை பற்றிக் கவலைப்படாமல், பேட்மிண்டன் சம்மேளனத்தின் உத்தரவை மீறி இங்கி லாந்து சர்வதேச பேட்மிண்டன் தொடரை நடத்தி நிறைவு செய்துள்ளது. இங்கிலாந்தின் இந்தச் செயல் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

;