பெரம்பலூர், ஜூலை 20- இந்திய மாணவர் சங்கம் சார்பில் பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகி பாஸ்கர் தலைமை வகித்தார். கவிஞர் அம்மணி வரவேற்றார். எஸ்எப்ஐ மாநில செயற்குழு கண் ணன் சிறப்புரை ஆற்றினார். அட்டவணை-8-ல் இடம்பெற் றுள்ள 22 தேசிய மொழிகளிலும் புதிய கல்விக் கொள்கை வரைவினை மொழிபெயர்த்து மத்திய அரசே வெளியிட வேண்டும். புதிய கல்விக் கொள்கையை வாசித்து, விவாதிக்க 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை யினை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களுக்கான மருத்துவர் கழக மாநில செயலாளர் டாக்டர் சி.கருணா கரன், தமுஎகச மாவட்ட செயலாளர் ப.செல்வகுமார், தமழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆ.ராமர் ஆகியோர் விளக்க உரையாற்றினர். பேராசிரியர் குமணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் என்.செல்ல துரை, கவிஞர் காப்பியன், மருத்துவர் ஜெயலட்சுமி உள்பட கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.