tamilnadu

img

கர்நாடகத்தில் அனுமனுக்கு 1200 கோடியில் சிலை.... சாமியார் ஆனந்த் சரஸ்வதி அறிவிப்பு...

பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் உள்ளராம்பூர் பகுதியில், ஆயிரத்து 200 கோடி ரூபாயில் அனுமனுக்கு சிலை அமைக்கப்படும் என்று ஹனுமான் ஜென்மபூமி அறக் கட்டளைத் தலைவர் ஆனந்த் சரஸ்வதி அறிவித்துள்ளார்.மோடி ஆட்சிக்கு வந்த பிறகு,சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்182 மீட்டர் உயரத்தில் சிலை வைக்கப் பட்டது.அதைத் தொடர்ந்து, சத்ரபதி சிவாஜிக்குமகாராஷ்டிராவில் ரூ. 3 ஆயிரத்து600 கோடி செலவில் சிலை அமைக்கும் பணிகளும், உத்தரப்பிரதேச மாநிலம் சரயூ நதிக்கரையில் ராமருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்செலவில், 251 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கும் பணிகளும் துவங்கின.இந்நிலையிலேயே, கர்நாடக மாநிலம் ராம்பூர் பகுதியில், ராமரின் பக்தன் அனுமனுக்கு, 215 மீட்டர் உயரத்தில் சிலை நிறுவ உள்ளதாக,அனுமன் ஜென்மபூமி அறக்கட்டளைத் தலைவர் சாமியார் ஆனந்த் சரஸ்வதி அறிவித்துள்ளார். 1200 கோடி ரூபாய் செலவில் இந்தசிலை அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.