tamilnadu

img

எழுத்தாளன் யார்? உன் அப்பா என்ன வேலை பார்க்கிறார்

நான் புதுவைக்கு வந்த புதுசில் என்னுடைய பையன் நான் இருக்கும் வீட்டைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டான். யாரிடம் கேட்டாலும் தெரிய வில்லை.உன் அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்று கேட்கிறார்கள். இவன் சொல்லுகிறான் “ரைட்டர்” என்று. அவர்கள் கேட்கிறார்கள் “எந்த போலீஸ்ஸ்டேஷனில்?” . நான் மாடியில் உட்கார்ந்து கொண்டு இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.நானே ஒரு குரல் கொடுத்திருக்கலாம். செய்யவில்லை. என்ன நடக்கும் பார்க்க லாம் என்று “கல்லுக்குத்தி” போல அசையாமல் இருந்தேன்.இந்த ஊரில் பல நல்ல வழக்கங்கள் மக்களிடம் உண்டு, யாராவது ஒருவர் வந்து வழிகேட்டால், அவர்களே பக்கத்தில் விசாரித்துக் கூட்டிக் கொண்டுபோய்விட்டுவிடுவார்கள். அப்படி ஒரு குணம்.ஒருத்தர் சொல்லுகிறார்: “போலீஸ் ஸ்டேஷனில் வேலைபார்க்கும் யாரும்இங்கே இல்லையே. ஆனா, நாங்க அவரைப்ப்பாத்து இருக்கோம். அவரும் அவரோட சம்சாரமும் இந்த வழியாகத்தான் நடைபயிற்சி போவார்கள்.


“ஆமா, நாங்களும் பார்த்திருக்கோமே! அவர்கள் வீட்டுக்கு நடிகர் நாசர் கூட வந்திருக்கிறாரப்பா”.நாசர் வந்த வீடா, அட; இது தாம்ப அந்த வீடு. போங்க படியேறிப் போங்க என்றதும், அவன் உள்ளே வரும்போது, “யப்பா நாசர் நம்மவீட்டுக்கு வந்தாராமே என்று கேட்டுக் கொண்டே வந்தான்.“நாசர் மட்டுமா, அவரோட சம்சாரம், பிள்ளைகள் எல்லாருமே வந்தாங்க” என்று அவனோட அம்மா கணவதியும் சொன்னார்.“நல்ல வேளை நாசர் வந்தது; இல்லென்னா திண்டாடிப் போயிருப் போம்” என்று சொல்லிக் கொண்டான்.நாசர் மட்டுமா, தங்கர்பச்சான், பாரதிராஜா, பார்த்திபன், கமலஹாசன், அம்சன்குமார், பாக்யராஜ், இளைய ராஜா, சிவகுமார் இப்படிச் சொல்லலாம்.நான் எழுத்தாளனாக இருக்கப்போயித்தான் என்னைத் தேடி வரு கிறார்கள். இன்னொரு முக்கிய விசயம்.என்னை இந்த ஊருக்கு வர வழைத்தது, பள்ளிப்படிப்பை முடிக்காதஎன்னை புதுவை மத்தியப் பல்கலைக்கழ கத்துக்குப் பேராசிரியராக அழைத்ததே, அதைச் சொல்ல வேண்டாமா?


சரி, மதுரைக்கு எந்த எந்த எழுத்தா ளர்கள் வந்தார்கள்? பாரதியார் வந்து, ஒரு மூன்று மாதம் பள்ளி ஆசிரியராக வந்தார்.“புயலிலே ஒரு தோனி” நாவல் எழுதிய ப.சிங்காரம் மதுரை ஒய்எம்சி கட்டடத்தில் சிறிய ஒரு அறையில் வாழ்நாள் பூராவும் வாழ்ந்து காலமானது மதுரையிலேயே ரொம்பப் பேருக்குத் தெரியாது. இன்னும் பட்டியலிடலாம். இவை எல்லாம் பழைய காலங்கள். இப்போது நடப்பது புதிய காலம், புதிய யுகம், எழுத்தாளர்களின் காலம்.எம்.பி. பதவிக்கு ஒரு எழுத்தாளர் நிற்கிறார் - நிறுத்தப்பட்டிருக்கிறார் என்பதுபெரிய விசயம்; மதுரைத் தொகுதி யோகம் செய்திருக்கிறதென்று சொல்ல வேண்டும். எழுத்தாளன் என்பவன் “வாமனன் போல, பார்க்கச் சிறிய வன்; வல்லமையில் பெரியவன். தோழர்சு.வெங்கடேசனை மதுரை தேர்ந்தெடுத்து தில்லிக்கு அனுப்பும். இவரது வெற்றியைக் கொண்டாடத்தான் போகிறோம்; சந்தேகமில்லை எனக்கு.

;